மாணவர் கௌரவிப்பு

கல்விப் பொதுத்தராதர உயர் தரப் பரீட்சையில் தேசிய மற்றும் மாவட்ட ரீதியில் வடக்கு மாகாணத்தில் சிறந்த பெறுபேற்றை பெற்ற மாணவர்களைக் கவுரவிக்கும் நிகழ்வும் புதுவருடத்தை வரவேற்கும் நிகழ்வும் வடக்கு மாகாண ஆளுநர் அலுவலகத்தில் இன்று காலை நடைபெற்றது.

ஆளுநர் ரெஜினோல்ட் கூரே தலைமையில் நடைபெற்ற இந் நிகழ்வில் வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்கினேஷ்வரன் பிரதம விலுந்தினராக கலந்து கொண்டு மாணவர்களுக்கு பதக்கங்களை அணிவித்து பரிசுப் பொருட்களையும் வழங்கியுள்ளார்
இந் நிகழ்வில் வடக்கு மாகாண அவைத் தலைவர் சீ.வீ.கே.சிவஞானம் அமைச்சர்களான அனந்தி சசிதரன், சிவநேசன், குணசீலன், சர்வேஸ்வரன் உட்பட மாகண சபை உறுப்பினர்கள் அமைச்சின் செயலாளர்கள் உள்ளிட்ட அதிகாரிகள் எனப் பலரும் கலந்து கொண்டிருந்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

vakeesam Like Page close[x]
Or wait 30 seconds
Social Media Auto Publish Powered By : XYZScripts.com