சற்று முன்
Home / செய்திகள் / மாணவர் ஒன்றிய அறிக்கை போலியானது – மாணவர் ஒன்றிய பிரதிநிதி பரபரப்புக் குற்றச்சாட்டு

மாணவர் ஒன்றிய அறிக்கை போலியானது – மாணவர் ஒன்றிய பிரதிநிதி பரபரப்புக் குற்றச்சாட்டு

(13.08.2015) யாழ்.பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தில் வெளியிடப்பட்டதாக வெளியாகியுள்ள அறிக்கை நாடாளுமன்றத் தேர்தல் வேட்பாளரும் யாழ்ப்பாணத்திலிருந்து இயங்கும் வியாபார நிறுவனம் ஒன்றின் உரிமையாளருமான ஒருவரினாலேயே அவரது அலுவலகத்தில் வைத்துத் தயாரிக்கப்பட்டதாக யாழ் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியப் பிரதிநிதி ஒருவர் பரபரப்புக் குற்றச்சாட்டு ஒன்றினை முன்வைத்துள்ளார். 

எமது சமூகத்தின் அடையாளமாகவிருந்த யாழ்.பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தை தமிழ் தேசியக்கூட்டமைப்பு தனது சுயநலனிற்காக நாசமாக்கியிருப்பதாகவும் மாணவர் ஒன்றிய பிரதிநிதிகள் குற்றஞ்சாட்டியுள்ளனர்.

கூட்டமைப்பின் தற்போதைய வேட்பாளரும் வியாபாரியுமான ஒருவரின் ஏற்பாட்டிலேயே அனைத்தும் நடந்துள்ளது. கடித தலைப்புக்கள் அங்கேயே அச்சிடப்பட்டுள்ளது. இறப்பர் முத்திரைகள் கூட அங்கிருந்தே தயாரிக்கப்பட்டு எடுத்து வரப்பட்டுள்ளதாகவும் அப்பிரதிநிதிஅம்பலப்படுத்தியுள்ளனர்.

தமிழ் தேசிய மக்கள் முன்னணியினில் பிரச்சார கூட்டமொன்று கரவெட்டி மாலுசந்தியினில் இன்றிரவு (13) நடந்திருந்தது.

அம்மேடையினில் சுயவிருப்பினில் கருத்து தெரிவிக்கப்போவதாக தெரிவித்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியப்பிரதிநிதியொருவர் உரையாற்றினார்.

நான் போலியாக உருவாக்கப்பட்டுள்ள மாணவர் அமைப்பு தொடர்பினில் கவலை கொண்டுள்ளேன்.தற்போது தான் இனஅழிப்பிற்கான சர்வதேச விசாரணைக்காக போரடி தமிழ் மக்களது மனங்களினில் மதிப்பினை மாணவர் ஒன்றியம் பெற்றிருந்தது.

இப்போது தமது சுயநலத்திற்காக கூட்டமைப்பு போலியான மாணவர் அமைப்பொன்றை அமைத்து அறிக்கையொன்றினை கூட்டமைப்பிற்காக வெளியிட செய்துள்ளது.

நான் எந்தவொரு அரசியல் கட்சி சார்ந்தவனுமல்ல.அதில் ஆர்வம் கொண்டவனுமல்ல.ஆனால் மாணவர்களது பெயரினை பயன்படுத்தி அந்த வியாபாரி செய்வது மிக கேவலமான அரசியலாகும் என அம்மாணவ பிரதிநிதி மேலும் தெரிவித்தார்.

About Vakeesam Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

x

Check Also

கஜேந்திரன் எம்.பிக்கு பிணை !

யாழ்ப்பாணம் நல்லூரில் கைது செய்யப்பட்ட தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரன் ...

Social Media Auto Publish Powered By : XYZScripts.com