மாணவர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்ட இடத்தில் ரவைக் கோது மீட்பு

14691018_1114354625279627_7019101561694466024_nயாழ்.பல்கலைக்கழக மாணவர்கள் இருவர் உயிரிழந்த சம்பவம் தொடர்பில், சம்பவம் இடம்பெற்ற குளப்பிட்டி பகுதியில் தடயவியல் பொலிஸார் இன்று மேற்கொண்ட ஆய்வில் துப்பாக்கி ரவைகளின் கூடு ஒன்று மீட்கப்பட்டுள்ளது.

மேற்படி விபத்து இடம்பெற்ற பகுதிக்கு சற்று தூரத்தில் கொக்குவில் சந்தைக்கு முன்பாகவுள்ள பகுதியில் இன்றைய தினம் காலை 9 மணியளவில் யாழ். பொலிஸ் நிலைய தடயவியல் பொலிஸார் ஆய்வுகளை மேற்கொண்டனர். இதன்போது துப்பாக்கி ரவை கூடு ஒன்று மீட்கப்பட்டுள்ளது. இதன்மூலம் துப்பாக்கி பிரயோகம் செய்ய ஏகே-47 ரக துப்பாக்கி பயன்படுத்தப்பட்டமை கண்டறியப்பட்டுள்ளது.chunakam-police

மாணவர்கள் இறந்து கிடந்த இடத்தில் இருந்து 150 மீற்றர் தூரத்தில் துப்பாக்கி தோட்டாவின் வெற்றுக்கோது ஒன்று மீட்கப்பட்டது.

குறித்த குற்றச்சாட்டில் கைதுசெய்யப்பட்டு தடுத்துவைக்கப்பட்டுள்ள, 5 பொலிஸாரும் இன்று புதன்கிழமை (26) காலை சம்பவம் நடைபெற்ற இடத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டு, சம்பவம் பற்றிய விபரம் பெறப்பட்டுள்ளது.

கை விலங்கிடப்பட்டு விசேட அதிரடிப் படையினரின் பாதுகாப்புடன், சிறைசாலை பாதுகாப்பு அதிகாரிகளினால் 5 பொலிஸாரும் சம்பவ இடத்திற்கு அழைத்து வரப்பட்டுள்ளனர்.

கடந்த 20ம் திகதியன்று மோட்டார் சைக்கிளில் சென்றுகொண்டிருந்த இரு மாணவர்களில் ஒருவர் மீது பொலிஸார் மேற்கொண்ட துப்பாக்கிச் சூடு காரணமாக ஏற்பட்ட விபத்தில் இரண்டு மாணவர்களும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.14570285_752856924854859_4215783811280125767_n 14633044_752856994854852_6204148674306452727_n 14681800_1114354678612955_3374833985415965617_n 14690946_1114354738612949_3812405085901285151_n
14695589_1114354905279599_7017965786543028486_n 14705607_1114354955279594_8454535494610672710_n 14721556_1114354601946296_1085865940254048932_n 14721615_1114354835279606_1290300721161760749_n 14721763_1114354995279590_4240285113407456956_n 14724600_1114354655279624_7078129971767159982_n 14732210_1114354875279602_7283193761941563629_n

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

vakeesam Like Page close[x]
Or wait 30 seconds
Social Media Auto Publish Powered By : XYZScripts.com