மாட்டின் வீதி அடிதடி – தேர்தலை புறக்கணிக்கின்றது அருந்தவபாலன் அணி !

எதிர்வரும் உள்ளுராட்சி தேர்தலில் சாவகச்சேர நகரசபைக்கான பிரச்சார நடவடிக்கைகளிலோ மக்களிடம் வேட்பாளர்களிற்கு ஆதரவு கோரும் நடவடிக்கைகளிலோ ஈடுபடப்போவதில்லையென தமிழரசுக்கட்சி தென்மராட்சி அமைப்பாளர் அருந்தவபாலனும் அவரது ஆதரவாளர்களும் இன்றிரவு அறிவித்துள்ளனர். எதிர்வரும் உள்ளுராட்சி தேர்தலில் சாவகச்சேர நகரசபைக்கான பிரச்சார நடவடிக்கைகளிலோ மக்களிடம் வேட்பாளர்களிற்கு ஆதரவு கோரும் நடவடிக்கைகளிலோ ஈடுபடப்போவதில்லையென தமிழரசுக்கட்சி தென்மராட்சி அமைப்பாளர் அருந்தவபாலனும் அவரது ஆதரவாளர்களும் இன்றிரவு அறிவித்துள்ளனர்.

முன்னதாக சாவகச்சேரி நகரசபைக்கான வேட்புமனு தயாரிப்பில் ஏற்பட்ட குழப்பத்தால் இன்று காலையில் மார்ட்டின் வீதியிலுள்ள தமிழரசுக்கட்சியின் தலைமையகத்தில் பெரும் களேபரம் நடந்திருந்தது. கட்சியின் முக்கியஸ்தர்கள் சேர்ட்டைப்பிடித்து, கைகலப்பில் ஈடுபட்டனர். வடமாகாணசபை உறுப்பினர் சயந்தன் ஹெல்மெற்றினால் தாக்கப்பட்டார்.

முன்னதாக சாவகச்சேரி நகரசபை வேட்பாளர் தெரிவு அருந்தவபாலனிடம் ஒப்படைக்கப்பட்டிருந்தது. ஏற்கனவே நகரசபையில் இருந்தவர்களிற்கு இம்முறை இடமளிக்காமல் புதியவர்களிற்கு இடமளிக்க வேண்டுமென அருந்தவபாலன் கூறிவந்தார். அவர் தயாரித்த பட்டியலில் சாவகச்சேரி நகரசபையில் இருந்து முன்னாள் உறுப்பினர்கள் ஒருவரின் பெயரே இடம்பெற்றிருந்தது. பங்காளி கட்சிகளின் சிபாரிசையும் புறந்தள்ளி அருந்தவபாலன் செயற்பட்டிருந்தார்.

முன்னாள் உறுப்பினர்கள் ஐவருக்கு இடமளிக்க வேண்டுமென அருந்தவபாலனின் போட்டியாளரான மாகாணசபை உறுப்பினர் சயந்தன் விடாப்பிடியாக இருந்தார். இன்று காலையில் மார்ட்டின் வீதியில் உள்ள தமிழரசுக்கட்சி அலுவலகத்திற்கு அருந்தவபாலன் சென்று, தனது வேட்பாளர் பட்டியலை கொடுத்துள்ளார். இதேசமயத்தில் பக்கத்து அறையில் மாகாணசபை உறுப்பினர்கள் சயந்தன், சிவாஜிலிங்கம் இருவரும் உட்கார்ந்து புதிய வேட்பாளர் பட்டியல் தயார் செய்திருந்தனர். ரெலோவிற்கு இதில் நான்கு வேட்பாளர்கள் கிடைத்திருக்க வேண்டும். ஆனால் ஒருவரே உள்வாங்கப்பட்டார். புளொட் உள்வாங்கப்படவேயில்லை.இதற்குள் முன்னாள் உறுப்பினர்களும், வேறு சிலரும் தமிழரசுக்கட்சி அலுவலகத்தின்று முன்பாக கூடி சர்ச்சையில் ஈடுபட்டனர்.

புதிய பட்டியலைதான் சமர்ப்பிக்கப் போகிறார்கள் என்பதை அறிந்ததும் அருந்தவபாலன் கோபத்துடன் மாவை சேனாதிராசா, சயந்தன் இருவருடனும் தர்க்கப்பட்டுள்ளார். இதில் ஆதரவாளர்களும் கலந்துகொள்ள அந்த பகுதி கலவர பூமியானது. மாகாணசபை உறுப்பினர் சயந்தனின் சட்டையை முக்கியஸ்தர் ஒருவர் கொத்தாக பிடித்தார். சயந்தன் மீது ஹெல்மெட் தாக்குதல் நடந்தது.

ஆபாச வார்த்தைகளையும் இரண்டு தரப்பும் தாராளமாக பாவித்திருந்தன. நிலைமை கட்டுக்கடங்காமல் போக, கட்சி முக்கியஸ்தரான அருந்தவபாலனை நோக்கி (……………………….) வெளியே போவென மாவை சேனாதிராசாவின் மகன் கத்தினார். இந்த களேபரங்களால் ஆத்திரமுற்ற மாவை அங்கிருந்து வெளியேறி வடமாகாணசபைக்கு சென்று, அவைத்தலைவருடன் பேசி, அங்கிருந்து வேட்புமனு தாக்கல் செய்ய சென்றார்.

இதனையடுத்தே அருந்தவபாலன் வெளியேறியிருந்தார்.இந்நிலையில் இன்றிரவு தனது ஆதரவாளர்களுடன் கலந்துரையாடியதன் பிரகாரம் எதிர்வரும் உள்ளுராட்சி தேர்தலில் சாவகச்சேர நகரசபைக்கான பிரச்சார நடவடிக்கைகளிலோ மக்களிடம் வேட்பாளர்களிற்கு ஆதரவு கோரும் நடவடிக்கைகளிலோ ஈடுபடப்போவதில்லையென அருந்தவபாலன் தெரிவித்துள்ளார்.

 

நன்றி – பதிவு

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Social Media Auto Publish Powered By : XYZScripts.com