மாசி 21ம் திகதி கச்சதீவு உற்சவம் நடாத்த ஏற்பாடு

இலங்கை மற்றும் இந்திய நாட்டு மக்களும் இணைந்து பங்கெடுக்கும் கச்சதீவு புனித அந்தோனியார் ஆலய வருடாந்த உற்சவம் பெப்ரவரி 21ம் திகதி இடம்பெறவுள்ளது.
கச்சதீவு புனித அந்தோனியார் ஆலய வருடாந்த உற்சவத்திற்கான ஏற்பாடுகள் தொடர்பில் ஆராயும் கலந்துரையாடல் ஒன்று யாழ் மாவட்ட செயலகத்தில் இடம்பெற்றுள்ளது.
கடந்த சனிக்கிழமை(09.01.2016 ஆம் திகதி) இடம்பெற்ற இக்கலந்துரையாடல் தொடர்பில் யாழ் மாவட்ட அரசாங்க அதிபர் என்.வேதநாயகன் அவர்கள் ஊடகங்களிற்கு கருத்து தெரிவிக்கையில், இலங்கை மற்றும் இந்தியா ஆகிய இரண்டு பகுதிகளிலிருந்தும் 7000 வரையான பக்தர்கள் கலந்துகொள்ள இருப்பதால் இதற்கான முன்னாயத்தங்கள் தொடர்பில் இங்கு கலந்துரையாடப்பட்டது.இலங்கையிலிருந்து யாழ்ப்பாணம் வழியாக செல்லவுள்ள பக்தர்களுக்கென எதிர்வரும் 20ம் திகதி விசேட போக்குவரத்துகள் ஏற்பாடுசெய்யப்பட்டுள்ளன.
அதன்படி 20ம் திகதி காலை 4.30 மணிதொடக்கம் யாழ் மத்திய பேருந்து நிலையத்திலிருந்து குறிகட்டுவான் நோக்கி விசேட பேருந்துகள் செலுத்தப்படும்.இதற்கு அமைவாக குறிகட்டுவானிலிருந்து கச்சதீவு நோக்கி படகு சேவைகளும் 20ம் திகதி காலை 6.00 மணியிலிருந்து பி.ப 1.00 மணி வரை இடம்பெறும் என்று அரசாங்க அதிபர் தெரிவித்துள்ளார்.
மேலும் கடற்போக்குவரத்து தொடர்பில் பாதுகாப்பு ஏற்பாடுகளையும் பக்தர்களின் சுகாதாரம் மற்றும் உணவு உள்ளிட்ட ஏற்பாடுகளை இம்முறையும் கடற்படையினர் மேற்கொள்ளவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Social Media Auto Publish Powered By : XYZScripts.com