மாகாண முத­ல­மைச்­சர்­களும் அமைச்­ச­ர­வையில் பங்­கேற்பர் – அரசு

மாகாண சபை­களின் முத­ல­மைச்­சர்­க­ளையும் இரண்டு மாதங்­க­ளுக்கு ஒரு முறை அமைச்­ச­ரவைக் கூட்­டங்­களில் கலந்­து­கொள்ள செய்­வ­தற்கு அர­சாங்கம் தீர்­மா­னித்­துள்­ளது. ஜனா­தி­பதி மைத்­தி­ரி்­பால சிறி­சேன கொண்டு வந்த இந்த தீர்­மா­னத்­துக்கு அமைச்­ச­ரவை அங்­கீ­காரம் வழங்­கி­யது என்று அமைச்­ச­ர­வையின் பேச்­சா­ளரும் அமைச்­ச­ரு­மான கயந்த கரு­ணா­தி­லக்க தெரி­வித்தார்.

தகு­தி­யற்­ற­வர்கள் இரா­ஜ­தந்­திர கட­வுச்­சீட்­டுக்­களை பயன்­ப­டுத்­து­வ­தனை தடுப்­ப­தற்கும் நட­வ­டிக்­கைகள் எடுக்­கப்­பட்­டுள்­ளன என்றும் அவர் குறிப்­பிட்டார். அர­சாங்க தகவல் திணைக்­க­ளத்தில் நேற்று முன்தினம் நடை­பெற்ற வாராந்த அமைச்­ச­ரவை முடி­வு­களை அறி­விக்கும் செய்­தி­யாளர் மாநாட்டில் கலந்­து­கொண்டு உரை­யாற்­று­கை­யி­லேயே அவர் மேற்­கண்­ட­வாறு குறிப்­பிட்டார்.
அமைச்சர் அங்கு மேலும் குறிப்­பி­டு­கையில்,
மாகாண சபை­களின் விட­யங்­களை ஆராயும் நோக்கில் அமைச்­ச­ர­வையில் விசேட தீர்­மானம் ஒன்றை எடுத்தோம். அதா­வது மாகாண சபை­களின் முத­ல­மைச் ­சர்­க­ளையும் இரண்டு மாதங்­க­ளுக்கு ஒரு முறை அமைச்­ச­ரவைக் கூட்­டங்­களில் கலந்­து­கொள்ள செய்­வ­தற்கு அர­சாங்கம் தீர்­மா­னித்­துள்­ளது. ஜனா­தி­பதி மைத்­தி­ரி்­பால சிறி­சேன கொண்டு வந்த இந்த தீர்­மா­னத்­துக்கு அமைச்­ச­ரவை அங்­கீ­காரம் வழங்­கி­யது. அந்­த­வ­கையில் இரண்டு மாதங்­க­ளுக்கு ஒரு­முறை மாகாண முத­ல­மைச்­சர்­களும் அமைச்­ச­ரவைக் கூட்­டத்தில் கலந்­து­கொள்­வார்கள்.
மேலும் பாரா­ளு­மன்­றத்தில் அமைக்­கப்­ப­ட­வுள்ள ஆலோ­சனைக் குழுக்­களின் தலை­வர்­க­ளையும் அமைச்­ச­ரவைக் கூட்­டத்தில் கலந்­து­கொள்ள செய்­ய­வுள்ளோம் என்றார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Social Media Auto Publish Powered By : XYZScripts.com