மாகாண சபை முன் அணிதிரள பட்டதாரிகளிற்கு அழைப்பு

வடக்கு மாகாண வேலையற்ற பட்டதாரிகள், வேலைவாய்ப்பை வழங்குமாறு கோரி முன்னெடுத்து வரும் காலவரையறையற்ற போராட்டத்தின் பத்தாவது நாளான 08.03.2017 புதன்கிழமை மனித சங்கிலிப் போராட்டம் ஒன்றினை யாழ் மாவட்டச் செயலகம் முன்பாக முன்னெடுத்திருந்தனர்.

இதேவேளை 09.03.2017 வடக்கு மாகாண சபையின் அமர்வு கைதடியில் நடைபெறவுள்ள நிலையில் சபை அமர்வுகளை முடக்கும் வகையில் காலை 08.30 மணிமுதல் மாகாணசபை முற்றுகைப் போராட்டத்திற்கு அழைப்புவிடுக்கப்பட்டுள்ளது.

கடந்த 09 தினங்களாக யாழ் மாவட்டச் செயலகம்முன் போராட்டத்தில் ஈடுபட்டுவந்த பட்டதாரிகள் அனைவரது கவனத்தையும் ஈர்க்கும்வகையில் 10 ஆம் நாள் முதல் தினமும் தமது போராட்ட வடிவத்தை மாற்றி போராடப் போவதாகவும் அறிவித்துள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

vakeesam Like Page close[x]
Or wait 30 seconds
Social Media Auto Publish Powered By : XYZScripts.com