மாகாண சபையில் கவனயீர்ப்பு

அரசியல் கைதிகளின் விடுதலையை வலியுறுத்தி வடமாகாண சபையில் கவனயீர்ப்பு போராட்டம் மேற்கொள்ளப்பட்டது.

வடமாகாண சபையின் அமர்வு இன்று (24) கைதடியில் உள்ள பேரவைக்கட்டடத்தில் நடைபெற்றது. அதன் போது மாகாண சபை ஆளும் கட்சி உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம், ஜனாதிபதி, அரசியல் கைதிகளை விடுவிக்க வேண்டும் என கோரிக்கை விடுத்ததார். அதன்போது அவர் சபையில் போராட்டம் நடத்த அனுமதிக்க வேண்டும் எனவும் அவைத்தலைவரிடம் கோரிக்கை விடுத்தார். அவைத்தலைவர் அனுமதியளித்ததை அடுத்து ஆளும் கட்சி மற்றும் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் இணைந்து பதாதைகளை ஏந்தியவாறு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

vakeesam Like Page close[x]
Or wait 30 seconds
Social Media Auto Publish Powered By : XYZScripts.com