சற்று முன்
Home / செய்திகள் / மாகாண கீதம் – இறுதி அமர்வில் அங்கீகாரம் பெற்றது

மாகாண கீதம் – இறுதி அமர்வில் அங்கீகாரம் பெற்றது

வடக்கு மாகாண சபையின் ஐந்தாண்டு பதவிக்காலம் நாளை நள்ளிரவுடன் முடிவடையவுள்ள நிலையில் இன்று நடந்த கடைசி அமர்விலேயே வடக்கு மாகாண சபையின் கீதத்துக்கு சபையின் அங்கீகாரம் பெறப்பட்டது.

இன்று காலை 10 மணியளவில் அவைத் தலைவர் சி.வி.கே.சிவஞானம் தலைமையில் கூடிய மாகாண அவையில், வடக்கு மாகாணத்தின் கீதம் சபை உறுப்பினர்களால் ஏற்றுக் கொள்ளப்பட்டது. அத்துடன் மாகாண கீதமும் இசைக்கப்பட்டது.

மாகாண கீதம், சிறிலங்காவின் தேசிய கீதம் போன்று இருமொழிகளில் இருக்க வேண்டும் என்று உறுப்பினர் ஜெயதிலக விடுத்த கோரிக்கையும் இன்று அவையினால் ஏற்றுக் கொள்ளப்பட்டது.

About Jaseek

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

x

Check Also

கஜேந்திரன் எம்.பிக்கு பிணை !

யாழ்ப்பாணம் நல்லூரில் கைது செய்யப்பட்ட தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரன் ...

Social Media Auto Publish Powered By : XYZScripts.com