மாகாணசபை முன் கவன ஈர்ப்புப் போராட்டம் – பொதுமக்களின் ஆதரவுகோரும் வடக்கு பட்டதாரிகள்

அரச வேலைவாய்ப்புக் கோரி போராட்டாத்தில் ஈடுபட்டிருக்கும் வடக்கு மாகாணப் பட்டதாரிகளின் போராட்டம் 70 நாட்களைத் தாண்டிய நிலையில்  72 ஆவது நாளான செவ்வாய்கிழமை காலை 08 மணிமுதல் வடக்கு மாகாண சபையை முடக்கி நடைபெறும் கனவஈர்ப்புப் போராட்டத்திற்கு ஒத்துளைப்பு வழங்குவதோடு பல்கலைக்கழக மாணவர்கள், பொது அமைப்புக்கள் மற்றும் பொதுமக்களை கவனஈர்ப்புப் போராட்ட்தில் பங்கேற்று தமக்கு ஆதரவு வழங்குமாறு வடக்கு மாகாணப் பட்டதாரிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

கிழக்கு மாகாணப் பட்டதாரிகளின் போராட்டம் 75 நாட்களைக் கடந்த நிலையில் அவர்களிற்கான வேலைவாய்ப்புக்களை உடனடியாக வழங்க கிழக்கு மாகாண முதலமைச்சர் உத்தரவாதமளித்துள்ள நிலையில் வடக்கு மாகாண பட்டதாரிகளிற்கான நியமனங்களையும் தமது 70 நாள் போராட்டத்தை மதித்து வழங்குவதற்கு உடன் நடவடிக்கை எடுக்குமாறும் பட்டதாாரிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

vakeesam Like Page close[x]
Or wait 30 seconds
Social Media Auto Publish Powered By : XYZScripts.com