மஹிந்தவுக்கு எதிராக போஸ்டர் ஒட்டியதாக கைதுசெய்யப்பட்டவர்களுக்கு நஷ்ட ஈடு

மகிந்த ராஜபக்ஷவின் அரசாங்கம் ஊடக சுதந்திரத்தை முடக்கி வருவதாக குற்றம்சாட்டி சுவரொட்டிகளை ஒட்டிக்கொண்டிருந்த இரண்டு ஜேவிபி உறுப்பினர்களை கைதுசெய்ததன் மூலம் காவல்துறையினர் அடிப்படை உரிமைகளை மீறியுள்ளதாக இலங்கை உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. இதன்படி மனுதாரர்கள் இருவருக்கும் 25,000 ரூபாய் நஷ்டஈடு பெற்றுகொடுக்குமாறு காவல்துறை அதிபருக்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளதாக மனுதாரர்கள் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் சுனில் வடகள தெரிவித்தார்.

2009ஆம் ஆண்டு ஜனவரி மாதம், மகிந்த ராஜபக்ஷ அரசாங்கம் ஊடக சுதந்திரத்தை முடக்கி வருவதாக குற்றம்சாட்டும் சுவரொட்டிகளை ஒட்டிக்கொண்டிருந்த இரு ஜேவிபி உறுப்பினர்களை தெமட்டகொட காவல்துறையினர் கைதுசெய்தனர்.
ஆனால், சுவரொட்டிகளை ஒட்டியவர்கள் அரச விரோத தகவல்களை பரப்பியதாக குற்றம்சாட்டி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தியதாக வழக்கறிஞர் சுனில் வடகள பின்னர் தெரிவித்தார்.
இது இலங்கை அரசியல்சாஸனத்தை மீறும் செயலென்று தெரிவித்த மனுதாரர்கள் காவல்துறையினரின் நடவடிக்கைகளின் மூலம் தனது அடிப்படை உரிமை மீறப்பட்டுள்ளதாக தீர்ப்பளிக்குமாறு கோரி நீதிமன்றத்தை அணுகினர்.
தீர்ப்பை வழங்கிய நீதிபதிகள், சம்பந்தப்பட்ட சுவரொட்டிகளில் சட்ட விரோதமான கருத்துக்கள் எதுவும் இல்லை என்றும் கூறினர்.
எனவே, மனுதாரர்களுக்கு நஷ்டஈடு அளிக்கவேண்டுமென நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
இந்தத் தீர்ப்பு தொடர்பாக ஊடகங்களுக்கு கருத்துக்களைத் தெரிவித்த வழக்கறிஞர் சுனில் வடகள இந்த தீர்ப்பை தற்போதைய அரசாங்கம் கவனத்தில் கொள்வது அவசியமென்று கூறினார்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

vakeesam Like Page close[x]
Or wait 30 seconds
Social Media Auto Publish Powered By : XYZScripts.com