மஹிந்தவின் ராணுவ பாதுகாப்பு முற்றாக அகற்றல்…

mahinda6-626x380நாடாளுமன்ற உறுப்பினர் மகிந்த ராஜபக்சவின் ராணுவ பாதுகாப்பு இன்று முற்றாக விலக்கிக் கொள்ளப்படுகிறது.

ராணுவ ஊடகப்பேச்சாளர் பிரிகேடியர் ஜயநாத் ஜயவீர இதனை தெரிவித்தார்.

முக்கியஸ்தர்களின் பாதுகாப்பு நடவடிக்கைகளில் இருந்து ராணுவத்தினரை அகற்றுமாறு பாதுகாப்பு சபை மேற்கொண்ட தீர்மானத்திற்கு அமைவாக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாக அவர் குறிப்பிட்டார்.

இந்த நிலையில், அவரது பாதுகாப்பு பணிகளுக்காக காவல்துறை விசேட அதிரடிப்படையினர் மற்றும் முக்கியஸ்தர்கள் தொடர்பில் விசேட பயிற்சி பெற்ற அதிகாரிகள் இன்று முதல் ஈடுபடுத்தப்படுவதாவும் ராணுவ பேச்சாளர் தெரிவித்தார்.

இதுதொடர்பில் நாடாளுமன்ற உறுப்பினர் மகிந்த ராஜபக்ஷவின் பிரத்தியேக ஊடகசெயலாளர் உதித்த லொக்குபண்டார கருத்துத் தெரிவித்தபோது, மகிந்த ராஜபக்ஷவுக்கு வழங்கப்பட்ட ராணுவப் பாதுகாப்பு ஏற்கனவே விலக்கிக் கொள்ளப்பட்டுள்ளதாக குறிப்பிட்டார்.

நாடாளுமன்ற உறுப்பினர் மகிந்த ராஜபக்ஷவுக்கு பாதுகாப்பு வழங்குவதற்காக 102 இராணுவ சிப்பாய்கள் ஈடுபடுத்தப்பட்டிருந்த போதும், அதில் 50 பேர் கடந்த மாதம் 2ம் திகதி விலக்கிக் கொள்ளப்பட்டதாகவும் அவர் தெரிவித்தார்.

எவ்வாறாயினும் மகிந்த ராஜபக்ஷவின் ராணுவப் பாதுகாப்பு நீக்கப்பட்டமை தொடர்பில், அவரது ஆதவரவாளர்கள் எதிர்ப்பை வெளிப்படுத்தி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Social Media Auto Publish Powered By : XYZScripts.com