மஹிந்தவால் முடியாததன் காரணமாகவே நாட்டை என்னிடம் ஒப்படைத்தார் – ரணில்

Ranilசர்வதேசத்திடம் கடன்களை பெற்று நாடு பாதாளத்திற்குள் தள்ளப்பட்டு தொடர்ந்தும் நாட்டை நிர்வகித்து செல்ல முடியாத காரணத்தினாலேயே, அரசாங்கத்தை தன்னிடம் ஒப்படைத்ததாக பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

இந்த சவாலை ஏற்றுக்கொண்டு தற்போது நாட்டை படிப்படியாக முன்னேற்றி கொண்டிருக்கும் நிலையில் முதலாவது ஆண்டு நிறைவை இன்று கொண்டாடுவதாகவும், இரண்டாவது ஆண்டை கொண்டாடும் போது நாடு இதைவிட பாரிய முன்னேற்றத்தை அடைந்திருக்கும் என்றும் அவர் கூறியுள்ளார்.

மாத்தறை சனத் ஜயசூரிய மைதானத்தில் இன்று (19) இடம்பெற்ற நல்லாட்சி அரசாங்கத்தின் முதலாம் ஆண்டு நிறைவு தேசிய விழாவில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே பிரதமர் இதனை கூறினார்.

கிரிக்கெட் நிறுவனத்தில் இருந்த திருடர்கள் விரட்டப்பட்ட பின்னர் இலங்கை கிரிக்கெட் அணி தற்போது வெற்றிகளை உறுதிப்படுத்தி வருகிறதாகவும், நாட்டில் இருந்த திருடர்கள் விரட்டப்பட்ட பின்னர் நாட்டின் அபிவிருத்தி கைகூடியுள்ளதாகவும் பிரதமர் கூறினார்.

இந்த நடவடிக்கைகளை முன்னெடுத்துச் செல்லும் போது தன்னை தேசத்துரோகி என்று கூறுவதாகவும், தான் பிரபாகரனுக்கு பணப் பொதிகளை வழங்கி தேர்தலில் வாக்குகளைப் பெற்றுக் கொள்ளவில்லை என்றும் அவர் மேலும் குறிப்பிட்டார்.

“இணைந்து ஊரை முன்னேற்றுவோம்”, “இணைந்து நாட்டை முன்னேற்றுவோம்”, “இணைந்து எதிர்காலத்தை கட்டியெழுப்புவோம்” என அனைவருக்கும் அழைப்பு விடுத்த பிரதமர் “வேறு வேறாக பிரிந்து போட்டியிடுவோம்” என்று கூறினார்.

இதனூடாக உலகித்திற்கு புதிய அரசியல் ஒன்றைக் காட்ட வேண்டும் என்று பிரதமர் இங்கு மேலும்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

vakeesam Like Page close[x]
Or wait 30 seconds
Social Media Auto Publish Powered By : XYZScripts.com