சற்று முன்
Home / செய்திகள் / மல்லுக்கட்டும் வடக்கு மாகாணசபை – இரு அணிகளாக பிளவா?

மல்லுக்கட்டும் வடக்கு மாகாணசபை – இரு அணிகளாக பிளவா?

வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட தமிழக மக்களுக்கு உதவுவது தொடர்பாக வடமாகாண சபை அவைத்தலைவர் சி.வி.கே சிவஞானம் தலைமையில் நடைபெற்ற கலந்துரையாடலை வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன், விவசாய அமைச்சர் பொ. ஐங்கரநேசன், கல்வி அமைச்சர் த.குருகுலராஜா, சுகாதார அமைச்சர் ப.சத்தியலிங்கம், மீன்பிடி அமைச்சர் பா.டெனிஸ் வரன், பிரதி அவைத்தலைவர் அன்ரனி ஜெகநாதன் உள்ளடங்கலாக 23 உறுப்பினர்கள் புறக்கணித்திருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. 

ஞாயிற்றுக்கிழமை (06) காலை 10 மணிக்கு நடைபெற்ற இக் கலந்துரையாடலில் அவைத்தலைவர் சி.வி.கே.சிவஞானம் , எதிர்க்கட்சி தலைவர் சி.தவராசா உறுப்பினர்களான பா.கஜதீபன் து.ரவிகரன் , வை.தவநாதன் , க.சிவநேசன் , இ. இந்திரராஜா , கே.சயந்தன் , விந்தன் கனகரட்னம் , பி.நடராஜா , அ. பரம்சோதி , சு.பசுபதிப்பிள்ளை சி.அகிலதாஸ், ப.அரியரட்ணம் , எம்.தியாகராஜா ஆகியோரே கலந்து கொண்டிருந்தனர்.

முன்னதாக சனிக்கிழமை (05) முதலமைச்சர் தலைமையில் அமைச்சர்களுடனான கலந்துரையாடல் நடைபெற்றிருந்தது. அதில் எடுக்கப்பட்ட முடிவுகளின் பிரகாரம் இந்திய துணை தூதரகத்தை தொடர்பு கொண்டு எந்த வகையிலான உதவிகள் தேவை என கேட்கப்பட்டதாகவும், அதன் போது துணை தூதரகத்தால் உதவி பொருட்கள் எவையும் தேவையில்லை என கூறப்பட்டதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்நிலையிலேயே ஞாயிற்றுக்கிழமை அவைத்தலைவரால் கூட்டப்பட்ட கலந்துரையாடலை முதலமைச்சர், அமைச்சர்கள் உள்ளிட்ட உறுப்பினர்கள் புறக்கணித்ததாக தெரியவருக்கிறது.

இருந்தபோதிலும் கூட்டத்தில் கலந்துகொண்ட 15 பேரில் எதிர்க்கட்சிதவிர்ந்த ஏனையஉறுப்பினர்கள் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் அணி சார்ந்தவர்கள் என்றும்முதலமைச்சருக்கும் சுமந்திரனுக்கும் இடையில் ஏற்பட்டுள்ள விரிசல் காரணமாக ஏற்பட்ட பலப்பரீட்சையே ஞாயிற்றுக்கிழமைய ஒன்றுகூடல் புறக்கணிப்பு என உள்வீட்டுத் தகவல்களை மேற்கோள் காட்டி தகவல்கள் வெளியாகியுள்ளன.

அவைத்தலைவர் அழைப்புவிடுத்த கலந்துரையாடலிற்கு வருகாதராதவர்கள் விபரம் வருமாறு,

யாழ்ப்பாணம்
சி.வி.விக்னேஸ்வரன் (முதலமைச்சர்)
பொ.ஐங்கரநேசன் (விவசாய அமைச்சர்)
எம்.கே.சிவாஜிலிங்கம்
அனந்தி சசிதரன்
இமானுவேல் ஆர்னல்ட்
க.தர்மலிங்கம்
க.சர்வேஸ்வரன்
வே.சிவயோகன்
ச.சுகிர்தன் 

வவுனியா
அன்டனி ஜெகநாதன் (பிரதி அவைத்தலைவர்)
ஜாஸ்தீன் ஜவாகர்
வ.கமலேஸ்வரன்

கிளிநொச்சி
த.குருகுலராஜா (கல்வி அமைச்சர்)

வவுனியா
பா.சத்தியலிங்கம் (சுகாதார அமைச்சர்)
த.லிங்கநாதன்
அ.ஜெயதிலக்க
தர்மபால செனவிரத்ன

மன்னார்
பா.டெனிஸ்வரன் (மீன்பிடி அமைச்சர்)
எஸ்.குணசீலன்
அயூப் அஸ்மின்
எஸ்.சிராய்வா
எம்.ரஜீஸ்
அ.ரிப்கான்

About Vakeesam Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

x

Check Also

குப்பை மேடாக மாறும் காரைக்கால் – சுற்றுச்சூழல் பாதுகாப்பு குறித்து அபாய எச்சரிக்கை

நல்லூர் பிரதேச சபையின் திண்ம கழிவு தரம் பிரிக்கும் நிலையத்தில் தரம்பிரிக்கப்படாது வருடக்கணக்காக கொட்டிக் குவிக்கப்பட்டுக் ...

Social Media Auto Publish Powered By : XYZScripts.com