மல்லாகத்தில் கடத்தப்பட்ட மாணவி வரணியில் விடுவிப்பு!

யாழ். மல்லாகம் பகுதியில் வைத்து கஜஸ் வாகனத்தில் கடத்தப்பட்ட பாடசாலை மாணவி இரண்டு மணித்தியாலங்களின் பின்னர் தென்மராட்சி வரணிப் பகுதியில் வானிலிருந்து தள்ளிவிடப்பட்ட நிலையில், பொதுமக்களால் மீட்க்கப்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

மல்லாகத்திலுள்ள பாடசாலை ஒன்றில் உயர்தரப்பிரிவில் குறித்த மாணவி கல்வி கற்கிறார். பாடசாலைக்கு நடந்த செல்லும் வழியில் இன்று காலை 7.30 மணியளவில் கஜஸ் வாகனத்தில் வந்த அறுவர் கொண்ட குழுவினரால் கடத்தப்பட்டார். இரண்டு மணித்தியாலங்களின் பின்னர் தென்மராட்சி – வரணி – அம்மா கடைப் பிரதேசத்தில் வைத்து வானிலிருந்து அவர் தள்ளிவிடப்பட்டிருக்கிறார்.

இந்நிலையில், பொதுமக்களால் மீட்க்கப்பட்டட அவர் சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார். அங்கிருந்து மேலதிக மருத்துவப் பரிசோதனைக்காக யாழ்.போதனா வைத்தியசாலைக்கு மாணவி மாற்றப்பட்டுள்ளார். சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை மல்லாகம் மற்றும் சாவகச்சேரிப் பொலிஸார் இணைந்து மேற்கொண்டுவருகின்றனர்.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

vakeesam Like Page close[x]
Or wait 30 seconds
Social Media Auto Publish Powered By : XYZScripts.com