மலையக மக்கள் முன்னணி எவருக்கும் சளைத்த ஒரு அமைப்பு அல்ல – ஏ.அரவிந்தகுமார் எம்.பி

மலையக மக்கள் முன்னணி எவருக்கும் சளைத்த ஒரு அமைப்பு அல்ல. மலையக மக்கள் முன்னணி தமிழ் முற்போக்கு கூட்டணியுடன் ஒரு அங்கமாக செயல்படுவதனால் தமிழ் முற்போக்கு கூட்டணி வலுப்பெற்றுள்ளது என மலையக மக்கள் முன்னணியின் நிதிக்காரியதரிசியும், பதுளை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான ஏ.அரவிந்தகுமார் தெரிவித்தார்.

மலையக மக்கள் முன்னணியின் ஸ்தாபக தலைவரும், முன்னால் அமைச்சருமான அமரர் பெ.சந்திரசேகரனின் 7ஆவது சிரார்த்த தினம், 01.01.2017 அன்று காலை 12 மணிக்கு, தலவாக்கலை கதிரேசன் மண்டபத்தில் அனுஷ்டிக்கப்பட்டது.

இதில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

அமரர்.சந்திரசேகரன் மலையகத்தில் அடாவடி அரசியலுக்கு ஆப்பு வைக்க விதையிட்டவர். அவரின் இந்த செயற்பாடு இந்த நனவாகி வந்துள்ளது. அரச பயங்கரவாதத்திற்கு முகங்கொடுத்து மக்களின் சேவையை முன்னெடுத்த மாபெரும் தலைவர் சந்திரசேகரன் ஆவார்.

அவர் பாராளுமன்றத்தில் அமைச்சரவை அந்தஸ்துள்ள காலப்பகுதியில் வெளிநாடுகளில் அவர் ஆற்றிய உரை தொடர்பில் அரசாங்கம் மிக கவனிப்போடு இருந்தது.

பொங்கு தமிழ் மாநாட்டில் அவர் ஆற்றிய உரை அமைச்சரவை கூட்டங்களில் காரசாரமாக விவாதிக்கப்பட்டது. இதன்போது அன்றைய அரசாங்கம் இவரை அமைச்சரவை அந்தஸ்திலிருந்து விலக்கவும் தயாரகியது.

இந்த நிலையில் அமைச்சரவை அந்தஸ்த்தை கூட மதிக்காத இவர் அமைச்சரவை அந்தஸ்த்து தேவையில்லை என்று சொன்ன சுயநலமற்ற அரசியல்வாதி சந்திரசேகரன் ஆவார்.

இவரை போன்ற தலைவர் இன்று பார்க்ககூடயில்லை. எதிர்காலத்தில் இவ்வாறான தலைவர்கள் அமைவார்களா என்று தெரியவில்லை. இவர் மக்கள் சேவைக்காக மிக ஆழமாக சிந்தித்து செயல்பட்டவர். ஆகையினால் மலையகத்தில் இடம்பெற்று வந்த அடாவடி அரசியலுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்பது இவரின் எண்ண கருவாக அமைந்தது.

அதற்கேற்ப இன்று அடாவடி அரசியலுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது. சமூகம் சார்ந்த சிந்தனையாளர்களாக செயல்பட்ட இவர் மலையக மக்கள் முன்னணியை வலுவடைய செய்ய பாடுபட்டவர்.

ஆகையினால் மலையக மக்கள் கௌரவத்துடனும், உரிமையுடனும் வாழக்கூடிய நிலையினை இன்று உருவாக்கப்பட்டுள்ளது. புத்தாண்டில் இந்த மாபெரும் தலைவரின் அபிஷாஷைகளுக்கு அமைவாக ஒரே கூரையில் ஒற்றுமையாக செயல்பட வேண்டும்.

அதேவேளை இவரின் அபிலாஷைகளை பூர்த்திசெய்வோம் என தனது உரையில் தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

vakeesam Like Page close[x]
Or wait 30 seconds
Social Media Auto Publish Powered By : XYZScripts.com