மலையக மக்களின் மே்பாட்டிற்காக தமிழக அரசுடன் பேச்சுவார்த்தை – ஆறுமுகம் தொண்டமான்

இந்திய தமிழ்நாட்டு அரசாங்கத்தின் ஊடாக மலையகத்தில் உள்ள இந்திய வம்சாவளி மக்களின் அபிவிருத்திக்கு உதவிகளை பெற்றுக்கொள்ளும் முகமாக பேச்சுவார்த்தைகள் இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் முன்னெடுக்கும் என நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும், இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பொது செயலாளருமான ஆறுமுகன் தொண்டமான் தெரிவித்தார்.

தலவாக்கலையில் நடைபெற்ற மத்திய மாகாண தைப்பொங்கல் நிகழ்வில் பிரதம அதிதியாக கலந்து கொண்டு உரை நிகழ்த்துகையில் அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

இங்கு அவர் மேலும் தெரிவித்ததாவது,

இன்றைய நிகழ்வின் போது கலந்து கொண்ட மத்திய மாகாண முதலமைச்சரின் உதவியினை கொண்டு மாகாணத்தின் கல்வி அபிவிருத்தியினை முன்னெடுக்கும் முடியும் என அவரின் உரையின் ஊடாக எமக்கு பூரண நம்பிக்கை ஏற்பட்டுள்ளது.

மத்திய மாகாணத்தில் ஆசிரியர்களின் கரத்தை உயர்த்தப்பட வேண்டும். அதற்காக மலையகத்தின் தமிழ் கல்வியை உயர்த்துவதற்காக நடவடிக்கை எடுக்கப்படும். அத்தோடு ஆசிரியர்களின் கரத்தை உயர்த்துவதற்காகவும் நடவடிக்கை எடுக்கப்படும். இதற்காக தமிழ் நாட்டிலிருந்து உதவிகளும் பெற்றுக்கொள்ள இலங்கை தொழிலாளர் காங்கிரசுடன் பேச்சுவாரத்தைகள் முன்னெடுக்கப்படும்.

கலாச்சாரங்கள் பேணி பாதுகாக்க வேண்டும். ஆனால் மலையகத்தில் தொழில்நுட்ப வளர்ச்சியின் காரணமாக வீட்டில் பொங்கல் வைப்பதை கூட இன்றைய இளைஞர் யுவதிகள் மறந்துவிட்டனர். அவர்களுக்கு பொங்கல் வைப்பது எவ்வாறு என்ற பயிற்சிக்கும் வகுப்புகளை நடத்த வேண்டும்.

இந்திய வம்சாவளியான நாம் அங்கிருந்து கொண்டு வந்த கலாச்சாரங்களை மட்டுமல்லாது கலாச்சார விழுமியங்களையும் இலங்கையில் பாதுகாக்க கூடியவர்களாக திகழ்கின்றோம். இந்தவகையில் நமது கலாச்சாரங்கள் பேணி பாதுகாக்கப்பட அணைவரும் ஒற்றுமையாக செயல்பட வேண்டும்.

தைப்பொங்கல் திருநாளில் அடுத்த நாளான பட்டிப்பொங்கல் விழாவில் ஜல்லிகட்டு காளைகளை அடக்கும் வீர விளையாட்டு தொண்டு தொட்டு இந்தியாவில் கலாச்சாரமாக கொண்டு வரப்பட்டுள்ளது. ஆனால் இன்றைய நிலையில் கலாச்சாரங்கள் மறக்கப்பட்டு ஜல்லிகட்டு காளை போட்டிக்கான தடை தமிழ் நாட்டில் ஏற்பட்டுள்ளது. இதனை எதிர்த்து அங்குள்ள மக்கள் போராட்டங்களில் இறங்கியுள்ளனர். இதற்ககா என்னிடமும் கருத்துக்களை கேட்டனர்.

இதன்போது கலாச்சார விழுமியங்கள் பாதுகாக்கப்பட வேண்டும். அந்தவகையில் மனிதர்கள் மத்தியில் ஒற்றுமை வளர கூடிய வாய்ப்பு இருப்பதாக தெரிவித்து கலாச்சார விழுமியங்களுக்குட்பட்டு ஜல்லிகட்டு காளை அடக்கும் போட்டி நடைபெற வேண்டும்.
இது மூதாதையாரர்களின் வீர விளையாட்டு என தெரிவித்து கருத்து கூறியுள்ளேன்.

இந்திய சமுதாய பேரவை என இந்திய திண்டுக்கலில் இயங்கும் ஒரு பேரவை இலங்கையில் இந்திய வம்சாவளி மக்களுடைய கல்வி வளர்ச்சிக்கென பல்வேறு உயர்வுக்கென பயிற்சி நடவடிக்கைகளை முன்னெடுக்கின்றது.

அந்தவகையில் மலையக தமிழ் கல்வி வளர்ச்சியினை இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் மெம்மேலும் உயர்த்தும். 2017ம் ஆண்டு சுய கௌரத்தையும், தன்மானத்தையும் காக்க வழி பிறக்கும். யாரும் கவலைப்பட வேண்டாம்.

ஆகவே 2017ம் ஆண்டு நம் அணைவரையும் சுபீட்சத்துடனும், சந்தோஷத்துடனும் உரிமைகளை பாதுகாக்கும் வகையிலும் அமைய கூடிய வாய்ப்புகள் இருப்பதாக அவர் மேலும் தெரிவித்தார்.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Social Media Auto Publish Powered By : XYZScripts.com