சற்று முன்
Home / செய்திகள் / மலையக தொழிலாளர்களுக்கு ஆதரவாக நாளை கொழும்பில் போராட்டம்

மலையக தொழிலாளர்களுக்கு ஆதரவாக நாளை கொழும்பில் போராட்டம்

இளைஞர்களின் ஒருமித்த உணர்வுடன் அரசியல் கலப்புப் பின்னணி எதுமற்று மலையக உழைக்கும் உறவுகளுக்காக நாளை (24) காலை 10 மணிக்கு கொழும்பு காலி முகத்திடலில் ஒன்றுகூடுமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

தமது அடிப்படைச் சம்பளத்தை 1000 ரூபாவாக அதிகரிக்குமாறு கோரி மலையக தோட்டத் தொழிலாளர்கள் தொடர்ச்சியான போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.

மலையக மக்களுக்கு ஆதரவாக கடந்த ஞாயிற்றுக்கிழமை யாழ்ப்பாணத்திலும் மட்டக்களப்பிலும் போராட்டங்கள் நடைபெற்ற நிலையில் மலைக மக்களின் உரிமைப் போராட்டத்திற்கு வலுச்சேர்க்கும்வகையில் கொழும்பில் நாளை (24) போராட்டம் ஒன்றுக்கு கொழும்புவாழ் இளைஞர்களால் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

குறித்த போராட்டம் நாளை முற்பகல் 10 மணிக்கு காலி முகத்திடலில் நடைபெறும். குறித்த போராட்டத்தில் கட்சி அரசியல் பேதமின்றி அனைவரையும் அணிதிரண்டு மலையக மக்களின் போராட்டத்திற்கு வலுச்சேர்க்குமாறு அழைப்பு விடுக்கப்பட்டள்ளது.

About Jaseek

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

x

Check Also

கஜேந்திரன் எம்.பிக்கு பிணை !

யாழ்ப்பாணம் நல்லூரில் கைது செய்யப்பட்ட தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரன் ...

Social Media Auto Publish Powered By : XYZScripts.com