மலையக இல்லத்தில் சிலோன் மனோகரனுக்கு நினைவஞ்சலி

புகழ் பெற்ற இலங்கையின் முன்னணிப் பாடகர் சிலோன் மனோகரின் ஆத்மா சாந்தியடைய வேண்டும் என அவரது மனைவி மற்றும் குடும்பத்தினரால் 27.01.2018 அன்று காலை பொகவந்தலாவ சிரிபுர பகுதியில் அமைந்துள்ள அவரது இல்லத்தில் திருப்பலி ஒப்புக்கொடுக்கப்பட்டது.

மலையகத்தில் பொகவந்தலாவ டின்சின் பகுதியை பிறப்பிடமாக கொண்ட இவர் பொப்பிசைச் சக்கரவர்த்தி என அழைக்கப்பட்டார். சிலோன் மனோகர் என்ற பெயரில் தென்னிந்தியத் திரைப்படங்களில் தமது நடிப்பாற்றலை வெளிப்படுத்தியிருந்தார்.

இவர் இலங்கையில் முன்னணிப் பாடகர்களின் தனக்கென தனி முத்திரை பதித்திருந்தார். இலங்கையில் பொப்பிசைப் பாடல்கள் பலவற்றை பாடியது மாத்திரமல்லாது, இந்தியாவில் தமிழ் சினிமாவிலும் சின்னத்திரை நாடகங்களிலும் நடித்துள்ளார்.

இலங்கையில் பொப்பிசைச் சக்கரவத்தி என பலராலும் அழைக்கப்பட்ட மனோகரன், தமிழ், சிங்களம், மலே, ஹிந்தி, உள்ளிட்ட பல மொழிகளில் பாடி ஈழத் தமிழர்களுக்கு பெருமை சேர்த்தவர் என கலைஞர்கள் கூறுகின்றனர்.

“சுராங்கனி சுராங்கனி மாலு கெனாவா” என்ற பாடல், ஈழத்தில் மாத்திரமல்ல, தமிழகம் உள்ளிட்ட தமிழ் மக்கள் வாழும் அனைத்து நாடுகளிலும் புகழ்பெற்றது. அத்துடன் அந்தப்பாடலை ஹிந்தி, மலையாளம், பேரர்த்துக்கீஸ் உள்ளிட்ட பல மொழிகளிலும் பாடி உலக கலைஞர்களின் பாராட்டைப் பெற்றவர்

நீண்டகாலமாக சென்னையில் வாழ்ந்து வந்த ஏ.இ.மனோகரன், இந்தியக் கலைஞர்களின் பாராட்டுக்களையும் பெற்றுள்ளமை குறிப்பிடதக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

vakeesam Like Page close[x]
Or wait 30 seconds
Social Media Auto Publish Powered By : XYZScripts.com