மலையகத் தமிழருக்கு எதிரான பொலிஸாரின் அடாவடி நிறுத்தப்படவேண்டும் – மத்திய மாகாண சபை உறுப்பினர் கணபதி கணகராஜ்

மலையக தமிழ் இளைஞர்களுக்கு எதிராக பொலிஸார்களால் அரங்கேற்றப்படும் அடிதடி அராஜகத்தை கண்டித்து அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும். தமிழ் இளைஞர்கள் வீதிக்கு வருவதற்க்கு அஞ்சப்படும் சூழ்நிலையை மீண்டும் இந்நாட்டில் அரங்கேற்ற இடம் கொடுக்க வேண்டாமென மத்திய மாகாண சபை உறுப்பினர் கணபதி கணகராஜ் தெரிவித்தார்.

அட்டன் நகரில் 23.09.2016 அன்று மாலை சிகையலங்கார நிலைய ஊழியர் ஒருவர் அட்டன் பொலிஸ் அதிகாரி ஒருவரால் தாக்கப்பட்டதை கண்டித்து அட்டன நகரில் 24.09.2016 அன்று பகல் 1.30 மணியளவில் இடம்பெற்ற கவனயீர்ப்பு போராட்டத்தில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையில் அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவித்ததாவது,

அன்று புஸ்ஸலாவ பொலிஸ் நிலையத்தில் தோட்டப்பகுதி தமிழ் இளைஞர் ஒருவர் தாக்கப்பட்டு தூக்கிட்டு உயிரிழந்ந சம்பவம் மனதில் இருந்து அகன்று செல்வதற்க்கு முன் அட்டனில் இளைஞன் ஒருவர் பொலிஸாரால் தாக்கப்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இந்த வேளையில் இவ்விரு சம்பவங்களையும் இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் வன்மையாக கண்டிப்பதோடு நடந்தேறிய தாக்குதல் சம்பவத்துக்கு உரித்தான அதிகாரிக்கெதிராக நடவடிக்கையை அரசாங்கம் மேற்கொள்ளவேண்டுமென இதன் போது அவர் தெரிவித்தார்.dsc08514 dsc08516 dsc08518 dsc08519 dsc08522 dsc08536 dsc08549 dsc08556

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Social Media Auto Publish Powered By : XYZScripts.com