மலை­­ய­கத்தில் கடும் பனிப்பொழிவு!

மலை­ய­கத்தில் தொடரும் சீரற்ற கால­நிலை கார­ண­மாக அதி­காலை வேளை­களில் கடும்­ ப­னி­ பொ­ழிவுடன், பொது மக்­களின் இயல்பு வாழ்க்­கையும் பாதிக்­கப்­பட்­டுள்­ளது.

இந்­நிலையில் சார­தி­களை அவ­தா­னத்­துடன் வாக­னங்களை செலுத்­து­மாறு அறி­வு­றுத்­தப்பட்­டுள்­ளது. மாலை வேளை­களில், பலத்த காற்று, இடி­யுடன் கூடிய மழை பெய்யும் என வானி­லை அவ­தான நிலையம் எதிர்வு கூறி­யுள்­ளதால் பொதுமக்­களை அவதா­னத்­து டன் நடந்து கொள்­ளு­மாறும் எச்­ச­ரிக்கை விடுக்­கப்­பட்­டுள் ளது.

குறிப்­பாக ஊவா மாகா­ணத்தில் பனி யுடன் கூடிய காலநிலை ­நீ­டித்து வரு­வ­தாலும் ஆங்­காங்கே இடி­யுடன் கூடிய மழை பெய்­யு­மென எதிர்வு கூறப்­பட்­டுள்­ள­தாலும் வெட்டவெளி, மலை உச் சிகள் மற்றும் மலைப்­பாங்­கான இடங்­களில் வேலை செய்­ப­வர்கள் மாத்­தி­ர­மன்றி மரங்­களின் கீழ் நட­மா­டு­ப­வர்களும் மிக அவ­தா­ன­மாக நடந்து கொள்­ளு­மாறு கேட்டுக் கொள்­ளப்­பட்­டுள்­ளனர்.

அதே­வேளை மண்­ச­ரிவு அபாயம் நில வும் பகு­தி­களில் வாழும் மக்களை அதிக மழை பெய்யுமிடத்து பாதுகாப் பான இடங்களுக்குச் செல்லுமாறும் இடர் முகாமைத்துவ நிலையம் அறிவித்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Social Media Auto Publish Powered By : XYZScripts.com