சற்று முன்
Home / செய்திகள் / மலேரியா நோய் இல்லை எனினும் கட்டுப்பாட்டு நடவடிக்கைகள் தொடர்ந்து பேணப்படவேண்டும்

மலேரியா நோய் இல்லை எனினும் கட்டுப்பாட்டு நடவடிக்கைகள் தொடர்ந்து பேணப்படவேண்டும்


இலங்கையில் நாட்டில் இருந்து மலேரியா பரம்பல் இல்லை என 2012 ஆம் ஆண்டு கண்டுபிடிக்கப்பட்டு 2016 ஆம் ஆண்டு உலக சுகாதார நிறுவனத்ததல் மலேரிய அற்ற நாடாக பிரகடனப்படுத்தப்பட்டது. இருப்பினும் மீண்டும் மலேரியா இந்த நாட்டுக்குள் பரவாமல் இருப்பதற்கான கட்டுப்பாட்டு நடவடிக்கைககளை மேற்கொள்ள வேண்டியது அவசியமாக உள்ளது என பிராந்திய மலேரிய தடை இயக்க பொறுப்பு வைத்திய அதிகாரி நொறிஸ் மரியச்செல்வம் தெரிவித்துள்ளார்.

மலேரியா விளிப்புணர்வு தொடர்பான செயலமர்வு நேற்று (03.05.2018) யாழ்ப்பாணத்திலுள்ள விருந்தினர் தங்ககம் ஒன்றில் நடைபெற்றது. அதில் கருத்துரைத்தபோதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
இது தொடர்பில் மேலும் குறிப்பிட்ட அவர்,

மலேரியா ஒட்டுண்ணியால் பரப்பப்படும் நோயாக உள்ளது. மலேரியா நோய் உள்ள ஒருவரை நுளம்பு கடித்து அதே நுளம்பு வேறு ஒருவரை கடிக்கும் போது இந்த ஒட்டுண்ணி கடத்தப்படுகிறது. இவ்வாறு தொற்று ஏற்படுகிறது. இது பொருளாதார பின்னடைவை மட்டுமல்லாது அதிக உயிரிழப்பை ஏற்படுத்தியிருந்தது.

நீண்டகால விளைவு உடனடி விழைவுகளாக சிறுவர்கள் தாய்மார்கள் பெரியவர்கள் மீது தாக்கம் கூடுதலாக உள்ளது. மலேரியா பெரும் சவாலா எமது நாட்டில் இருந்து வந்தது. இதை கட்டுப்படுத்துவதற்கு பெரும்தொகையான நிதி ஒதுக்கப்பட்டு கட்டுப்படுத்தப்பட்டது. தற்போது கடந்த 5 வருடங்களாக நாட்டுக்குள்ளேயே மலேரியா பரவக்கூடிய தன்மை தடுக்கப்பட்டது.
இருப்பினும் வெளிநாடுகள் இந்திய ஆபிரிக்கா போன்ற நாடுகளில் மலேரியாவின் தாக்கம் அதிகமாக காணப்படுவதால் அங்கிருந்து இலங்கைக்கு வருபவர்கள் மற்றும் தேலை நிமித்தம் இலங்கையில் இருந்து அந்த நாடுகளுக்கு சென்று வருபவர்கள் மூலம் மீண்டும் அந்த நோய் பரவக்கூடிய சந்தர்ப்பம் அதிகளிவில் தற்போது ஏற்பட்டுள்ளது.

மலேரியாவை பரப்பக்கூடிய புதுவித நுளம்பினமும் (அனோபிளிஸ் ஸ்ரெபன்சி) அதாவது நகர்ப்புற மலேரியாவை பரப்பக்கூடிய நுளம்புகள் வட பகுதியில் கூடுதலாக இனங்காணப்பட்டுள்ளது. எனவே எமது பிரதேசம் மீண்டும் மலேரியா தொற்றுக்கு உள்ளாகும் ஆபத்து நிலமை ஏற்பட்டுள்ளது.

2012 தொடக்கம் 2018 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் வரை 11 நோயாளர்கள் (வெளிநாடுகளில் இருந்து வந்தவர்கள்) இனங்காணப்பட்டுள்ளார்கள். இந்த வருடம் மலேரியா தாக்கம் இருப்பதாக கண்டு பிடிக்கப்பட்டவர்களில் வெளிநாடுகளுக்கு சென்று வந்த இராணுவ வீரர்கள், பொலிஸ் அதிகாரிகள், வெளிநாடுகளில் இருந்து வேலை நிமித்தம் வந்தவர்கள் தான் இனங்காணப்பட்டுள்ளார்கள்.

இதை தடுப்பதற்கு இந்தியா ஆபிரிக்கா போன்ற நாடுகளுக்கு செல்வோர் சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் அல்லது பிராந்திய மலேரிய தடை இயக்க பணிமனையிலோ தாம் செல்வதை அறிவித்து அதற்குரிய தடுப்பு மருந்துகளை எடுத்து செல்ல வேண்டும். அங்கிருந்து வந்த பின்னரும் இரத்த பரசோதனைகளை மேற்கொண்டு தடுப்பு மருந்துகளை பெற வேண்டும். நுளம்பு கூடுதலாக உள்ள இடங்களில் இருப்பவர்கள் நுளம்பு வலையினுள் தூங்குவதுடன், நுளம்பை விரட்டும் எண்ணை கிறீம் பாவித்தல், அவசியம் ஆகும். மலேரியா பரிசோதனைகள் அனைத்து அரச தனியார் வைத்தியசாலைகளிலும் இலவசமாக பெற்றுக்கொள்ள முடியும்.
இது தொடர்பாக பொதுமக்கள் மத்தியில் விழிப்புணர்வு இல்லாத தன்மை காணப்படுகிறது. வந்த பின் தடுப்பதை விட வருமுன் காக்க வேண்டும்.
நகர்ப்புற மலேரியா பரப்பும் நுளம்பு இந்தியாவில் மிக வேகமாக நோயை பரப்பி வருகிறது. இது தீவிர மலேரியாவுக்குரிய தன்மையாக காணப்படுகிறது. இது வடக்கில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

அதாவது இலங்கையிலேயே முதன் முதலாக நகர்ப்புற மலேரியாவை பரப்பும் நுளம்பு 2016 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் மன்னார் மாவட்டத்தில் கண்டுபிடிக்கப்பட்டது. தன் பின்னர் மேற்கொள்ளப்பட்ட ஆய்வில் வடக்கு மாகாணத்தில் வேறு மாவட்டங்களிலும் அதிகளிவில் கண்டு பிடிக்கப்பட்டது. மன்னார் யாழ்ப்பாணத்தில் அதிகமாகவும் அடுத்ததாக கிளிநொச்சி முல்லைத்தீவு வவுனியாவில் மாவட்டங்களில் ஓரளவாகவும் கண்டுபிடிக்கபபட்டுள்ளது.அவை கட்டுப்படுத்தப்பட்டுள்ளது.

யாழ் குடாநாட்டில் மலேரியா அபாயத்தை பார்க்கும் போது யாழ்ப்பாணத்தில் ஓரளவு கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளது. யாழ் மாநகர சபை கோப்பாய் நல்லூர் பகுதிகளில் இனங்காணப்பட்டது. அப்பகுதிகளில் 1500 கிணறுகளில் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு 269 கிணறுகளில் இந்த நுளம்பு கண்டுபிடிக்கப்பட்டது. அதனை தொடர்ந்து கட்டுப்பாட்டு நடவடிக்ககள் மேற்கொள்ப்பட்ட பின்னர் அதில் ஓரளுவு கட்டுப்படுத்தப்பட்டு 372 கிணறுகள் பரிசோதிக்கப்பட்டது. அதில் ஒரு கிணற்றில் இந்த நுளம்பு இனம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. கட்டுப்படுத்தப்பட்டிருப்பினும் கட்டுப்பாட்டு நடவடிக்கை முற்றுப்பெறவில்லை.

மேலும் எமது தடுப்பு நடவடிக்கைகளளுக்கு பாரிய சவாலக இருப்பது கைவிடப்பட்;ட காணிகளில் உள்ள பராமரிப்பற்ற கிணறுகளில் தடுப்பு நடவடிக்கை மேற்கொள்ள முடியாமல் இருக்கிறது. அதற்கு சம்பந்தப்பட்டவர்களின் ஒத்துழைப்பு அவசியமாகிறது. கிணறுகளை மூடி பாவித்தல் மீன்கள் விடுதல் போன்ற செயற்பாடுகளை பொதுமக்கள் மேற்கொள்ள வேண்டும்.

About Jaseek

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

x

Check Also

கஜேந்திரன் எம்.பிக்கு பிணை !

யாழ்ப்பாணம் நல்லூரில் கைது செய்யப்பட்ட தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரன் ...

Social Media Auto Publish Powered By : XYZScripts.com