மலரட்டும் புதுவசந்தம் நிகழ்ச்சி எதிர்வரும் 10 இல்!

புதுவருடம் மற்றும் தைப் பொங்கல் பண்டிககைகளை முன்னிட்டு  இந்திய மற்றும் இலங்கை கலைகளை கிராமப்புறங்களில் வளர்க்கும் நோக்கில் யாழ். இந்திய துணைத்தூதரகத்தின் ஏற்பாட்டில் “மலரட்டும் புதுவசந்தம் – 2016” எனும் சிறப்பு இசை நடன நிகழ்ச்சி எதிர்வரும் 10 ஆம் திகதி பி.ப 3.00 மணியளவில் முல்லைத்தீவு மாவட்டம் புதுக்குடியிருப்பில் இடம்பெறவுள்ளதென இலங்கைக்கான இந்திய துணைத்தூதுவர் எ.நடராஜன் தெரிவித்துள்ளார்.
மல்லிகைத்தீவு மல்லிகை இளைஞர் கழகத்தினருடன் இணைந்து நடாத்தும் இந்த நிகழ்வானது புதுக்குடியிருப்பு மத்திய கல்லூரி பொன்விழா மண்டபத்தில் இடம்பெறவுள்ளது.

நிகழ்வில் முல்லைத்தீவு மாவட்டத்தைச் சேர்ந்த பாடசாலை மாணவர்கள் மற்றும் அம்மாவட்டத்தின்  கலா மன்றங்களின் மாணவ மாணவியினர் தமது ஆற்றுகையினை வழங்கவுள்ளனர் என அவர் மேலும் தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

vakeesam Like Page close[x]
Or wait 30 seconds
Social Media Auto Publish Powered By : XYZScripts.com