சற்று முன்
Home / செய்திகள் / மறவன்புலவு காற்றாலைக்கு எதிராக மக்கள் ஆர்ப்பாட்டம்..

மறவன்புலவு காற்றாலைக்கு எதிராக மக்கள் ஆர்ப்பாட்டம்..

யாழ் மறவன்புலவு பகுதியில் மின் காற்றலை அமைப்பதற்கு எதிப்பு தெரிவித்து பிரதேச மக்கள் இன்று போராட்டத்தில் ஈடுபட்டனர்.

கைதடியில் அமைந்துள்ள வடக்கு மாகண முதலமைச்சரின் அலுவலகத்திற்கு முன்னால் போராட்டம் இடம்பெற்றுள்ளது.

போராட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் வடக்கு மாகாண ஆளுநர் சுரேன் ராகவன் சந்தித்து கலந்துரையாடியிருந்தார்.

மறவன்புலவு பகுதியில் மக்கள் குடியிருப்புக்களிற்கு அண்மையில் மின் காற்றாலை அமைப்பதற்கு அனுமதி கொடுக்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து மறவன்புலவு மக்களினால் குறித்த போராட்டம் இடம்பொற்றது.

இன்றைய தினம் வடக்கு மாகாண ஆளுநரின் மக்கள் சந்திப்பு கைதடியில் அமைந்துள்ள முதலமைச்சர் அலுவலகத்தில் இடம்பெற்றுவரும் நிலையிலேயே போராட்டம் இடம்பொற்றது.

போராட்டம் நடைபெறும் இடத்திற்கு யாழ் மாவட்ட அரசாங்க அதிபர் மற்றும் சாவகச்சேரி பிரதேச செயலரை உடனடியாக இந்த இடத்திற்கு வருகை தருமாறும், போராட்டக்காரர்களின் 5 பேரையும் குறித்த சந்திப்பில் கலந்து கொள்ளுமாறும் ஆளுநர் உத்தரவிட்டுள்ளார்.

About kamal Raj

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

x

Check Also

கஜேந்திரன் எம்.பிக்கு பிணை !

யாழ்ப்பாணம் நல்லூரில் கைது செய்யப்பட்ட தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரன் ...

Social Media Auto Publish Powered By : XYZScripts.com