மருத்துவர்களுக்கு சிவாஜி சவால் !!

மக்களின் வரி பணத்தில் இலவசகல்வியினை கற்றுவிட்டு தனியார் மருத்துவக்கல்வியை எதிர்க்கும் வைத்தியர்கள்
அவர்களது சொந்த மாவட்டங்களில் பணியாற்ற தயாரா? என வடக்கு மாகாணசபை உறுப்பினர் சிவாஜிலிங்கம் சவால் விடுத்துள்ளார்.
மாகாண சபையின் இன்றைய 102 ஆவது அமர்வில் உரையாற்றிய அவர்,
“ இன்று யுத்தம் இல்லை ஆனாலும் சொந்த மாவட்டத்தில் பணியாற்ற வைத்தியர்கள்  தயாரில்லை. வடமாகாணத்தில் தற்போது சிங்கள வைத்தியர்கள் கடமையாற்ற வருகின்றார். ஆனால் இங்குள்ளவர் வசதி வாய்ப்பெனக் கூறி வெளிமாவட்டங்களை நோக்கி செல்கின்றனர்“ எனத் தெரிவித்தார்.
இதேவேளை நெடுந்தீவில் கடல் நீரை நன்னீர் ஆக்கி நெடுந்தீவில் குடிநீர் வழங்கப்படுகின்றது. ஆனால் மருதங்கேணியில் கடல்நீரை நன்னீராக்க எதிர்ப்பு தெரிவிக்கின்றனர். கடல் நீரை நன்னீர் ஆக்கினால் மீனினங்கள் அழியும் என சொல்கின்றனர். அப்படியாயின் நெடுந்தீவில் மீன் இனங்கள் அழிந்திருக்க வேண்டுமே. அவ்வாறு மீன் இனம் அழிந்திருந்தால் எவ்வாறு இந்திய மீனவர்கள் நெடுந்தீவு கடற்பரப்புக்குள் ஊடுருவி மீன் பிடிக்க முடியும். என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Social Media Auto Publish Powered By : XYZScripts.com