மரம் முறிந்து விழுந்து ஆறு வீடுகள் சேதம் – 40 பேர் பாதிப்பு

நாவலப்பிட்டி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கெட்டபுலா கடியன்லென தோட்டத்தில் பழமைவாய்ந்த மரம் ஒன்று முறிந்து விழுந்ததில் ஆறு வீடுகள் சேதமாகியுள்ளது. இதில் மூன்று வீடுகள் முற்றாகவும், மேலும் மூன்று வீடுகள் பகுதியளவிலும் சேதமடைந்துள்ளதாக தோட்ட நிர்வாகம் தெரிவிக்கின்றது.

08.06.2106 அன்று மாலை இடம்பெற்ற இந்த பாரிய சம்பவத்தில் பாதிக்கப்பட்ட குடியிருப்பாளர்களுக்கு உயிர் சேதம் எதுவும் இடம்பெறவில்லை என தெரிவிக்கும் தோட்ட நிர்வாகம் வீடுகளில் உள்ள பொருட்கள் முற்றாக சேதமடைந்திருப்பதாக தெரிவிக்கின்றனர்.

அத்தோடு பாதிக்கப்பட்ட ஆறு குடும்பங்களை சேர்ந்த 40 பேர் தற்காலிகமாக தோட்ட கலாசார மண்டபத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். இவர்களுக்கான உதவிகளை தோட்ட நிர்வாகம் செய்து வருகின்றது.

மரம் முறிந்து விழுந்ததன் காரணமாக இப்பகுதிக்கான மின்சார துண்டிப்பு ஏற்பட்டுள்ளதோடு திருத்த பணிகளை நாவலப்பிட்டி மின்சார சபையினர் மேற்கொண்டு வருகின்றனர்.

பழமைவாய்ந்த மேற்படி மரத்தை அப்புறபடுத்தும் நடவடிக்கையில் தோட்ட நிர்வாகமும், பிரதேசவாசிகளும் ஈடுபட்டுள்ளனர்.IMG_5980 IMG_5986 IMG_5999 IMG_6008 IMG_6011 IMG_6016 IMG_6020 IMG_6027 IMG_6030 IMG_6032 IMG_6040 IMG_6045 IMG_6051

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Social Media Auto Publish Powered By : XYZScripts.com