சற்று முன்
Home / செய்திகள் / மரண வீட்டில் ஒருவர் அடித்துக்கொலை

மரண வீட்டில் ஒருவர் அடித்துக்கொலை

ஹபுத்தளை, ஹல்மதுமுல்ல பகுதியில் நபர் ஒருவர் தாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளார்.

மரண வீடொன்றில் இரு குழுவினருக்கு இடையில் ஏற்பட்ட வாய்த்தர்க்கத்தின் காரணமாக இந்த தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

தாக்குதலில் பலத்த காயமடைந்த நபர் ஹல்மதுமுல்ல வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளார்.

ஹம்பாந்தோட்டை, சமகிபுர பகுதியை சேர்ந்த 38 வயதுடைய ஒருவரே இவ்வாறு கொலை செய்யப்பட்டுள்ளார்.

கொலை சம்பவத்துடன் தொடர்புடைய நபரை கைது செய்வதற்காக ஹல்மதுமுல்ல பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

About Jaseek

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

x

Check Also

கஜேந்திரன் எம்.பிக்கு பிணை !

யாழ்ப்பாணம் நல்லூரில் கைது செய்யப்பட்ட தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரன் ...

Social Media Auto Publish Powered By : XYZScripts.com