சற்று முன்
Home / செய்திகள் / மரண வீட்டில் இறுதிக் கிரியை நடக்கும் தருணம் 6 ஆயிரத்து 500 அமெரிக்க டொலர் திருட்டு – கிளிநொச்சியில் சம்பவம்

மரண வீட்டில் இறுதிக் கிரியை நடக்கும் தருணம் 6 ஆயிரத்து 500 அமெரிக்க டொலர் திருட்டு – கிளிநொச்சியில் சம்பவம்

கிளிநொச்சி திருவையாறுப் பகுதியில் இடம்பெற்ற ஆசிரியரின் மரண வீட்டிற்குள் புகுந்த உறவுக்கார் ஒருவர் 6 ஆயிரத்து 500 அமெரிக்க டொலரை களவாடிய சம்பவம் இடம்பெற்றுள்ளது.

கிளிநொச்சியில் வசித்துவருபவரான தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சையின் பிரபல ஆசிரியை ஒருவர் கடந்த 2 ஆம் திகதி காலமாகியுள்ளார். அவரது பிள்ளைகள் வெளிநாட்டில் வாழ்வதனால் உடலம் 5 நாட்களாகப் பாதுகாக்கப்பட்டு கடந்த 6 ஆம் திகதியே இறுதிக் கிரிகைகள் இடம்பெற்று தகனகக் கிரிகை இடப்பெற்றது.

இவ்வாறு இறுதிக் கிரியை இடம்பெற்ற 6 ஆம் திகதி உற்றார் , உறவினர் எனப் பலரும் கலந்துகொண்டிருந்தனர் . இறுதிக் கிரியைகள் முடிந்த பின்பு சற்று தாமதித்து அவதானித்த போது சாமி அறையில் வைக்கப்பட்டிருந்த வெளிநாட்டில் இருந்து வந்தவர்களின் பயணப்பை கத்தியால் வெட்டி பிரிக்கப்பட்டிருந்தது.

இதனை அவதானித்த நிலையில் ஆராய்ந்தபோது அப் பையில் வைத்திருந்த 6 ஆயிரத்து 500 அமெரிக்க டொலர் காணாமல் போயுள்ளது.

இருப்பினும் மரண வீட்டிற்கு பலரும் வந்த நிலையில் அதனை பொலிஸ் நிலையத்தில் முறையிடுவது உறவுகளை கொச்சப்படுத்துவமாக அமையும் என எண்ணி ஆரம்பத்தில் பொலிசில் முறையிடாதபோதும் சிறுமி ஒருவரின் தங்கச் சங்கிலியை அறுத்த குற்றச் சாட்டின் பெயரில் குற்றஞ்சாட்டப்பட்டு வழக்கு இடம்பெறும் நபர் ஒருவரும் அங்கே நடமாடியதனால் அவர்மீது சந்தேகம் ஏற்பட்டுள்ளது. இதேநேரம் குறித்த சபர் சாமி அறைக்குள் நடமாடியதனை ஓர் சிறுவன் அவதானித்துள்ளான்.

இவற்றின் அடிப்படையில் சந்தேகத்தின் பெயரில் குறித்த நபரை கிளிநொச்சிப் பொலிசார் கைது செய்து விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

About Jaseek

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

x

Check Also

கஜேந்திரன் எம்.பிக்கு பிணை !

யாழ்ப்பாணம் நல்லூரில் கைது செய்யப்பட்ட தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரன் ...

Social Media Auto Publish Powered By : XYZScripts.com