சற்று முன்
Home / செய்திகள் / மன்னார் வன்முறை அறிக்கை – அந்தர் பல்டி அடித்தது யாழ் மறை மாவட்டம்

மன்னார் வன்முறை அறிக்கை – அந்தர் பல்டி அடித்தது யாழ் மறை மாவட்டம்

திருக்கேதீச்சரம் வன்முறைச் சம்பவம் தொடர்பில் தன்னால் முன்னர் வெளியிட்ட அறிக்கைக்காக மன்னார் மறை மாவட்டத்திடம் மன்னிப்புக் கோரியுள்ள யாழ் மறை மாவட்ட குரு முதல்வர் மன்னார் மறைமாவட்டம் வெளியிட்ட அறிக்கையை தாமும் ஏற்றுக்கொள்வதாக குறிப்பிட்டு தன்னால் முன்னர் வெளியிட்ட அறிக்கையை மறுதலித்திருக்கிறார்.

பத்திரிகைகளில் வெளிவந்த செய்திகளை மட்டும் படித்துவிட்டு அதனை நம்பி முன்னர் அந்த அறிக்கையை வெளியிட்டதாகவும் மன்னார் மறை மாவட்டத்தின் அறிக்கையின் பின்பே உண்மை நிலையை அறிந்ததாகவும் குறிப்பிட்ட அவர் இந்து மக்களோடு தாம் சமரசமாக வாழணே்டும் என்ற உணர்விலேயே முன்னர் அவ்வாறு கிறிஸ்தவர்களின் வன்முறைச் சம்பவத்திற்கு கண்டனமும் கவலையும் வெளியிட்டு அறிக்கை வெளியிட்டதாகவும் குறிப்பிட்டு முன்னைய தனது அறிக்கையை தானே நிராகரித்து புதிய அறிக்கை ஒன்றை வெளியிட்டிருக்கிறார்.

அவரால் முன்னரும் தற்போதும் வெளியிடப்பட்டு எதிர் எதிர் நிலைப்பாடுடைய அறிக்கைகள் இணைக்கப்பட்டுள்ளன.

முன்னர் வெளியிட்ட அறிக்கையை நிராகரித்து இன்று வெளியிட்ட அறிக்கை
கிறிஸ்தவர்களின் வன்செயலுக்கு கண்டனம் தெரிவித்து முன்னர் வெளியிட்ட அறிக்கை

About Jaseek

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

x

Check Also

கஜேந்திரன் எம்.பிக்கு பிணை !

யாழ்ப்பாணம் நல்லூரில் கைது செய்யப்பட்ட தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரன் ...

Social Media Auto Publish Powered By : XYZScripts.com