சற்று முன்
Home / செய்திகள் / மன்னார் புதைகுழி 1499 -1719 ஆம் ஆண்டு காலப்பகுதிக்குரியதாம் – காபன் அறிக்கையில் தெரிவிப்பு

மன்னார் புதைகுழி 1499 -1719 ஆம் ஆண்டு காலப்பகுதிக்குரியதாம் – காபன் அறிக்கையில் தெரிவிப்பு

மன்னார் நகர நுழைவாயிலில் கண்டுபிடிக்கப்பட்ட மனிதப் புதைகுழியில் மீட்கப்பட்ட எலும்புக்கூடுகளின் மாதிரிகள் 300 தொடக்கம் 500 ஆண்டுகள் இடைப்பட்டவை என்று காபன் அறிக்கையில் வெளியிடப்பட்டுள்ளது.

இந்த மாதிரிகளின் அறிக்கையில் 1499 தொடக்கம் 1719ஆம் ஆண்டுவரையான காலப்பகுதியில் புதைக்கப்பட்ட மனித உடலங்களின் எச்சங்களே இவை என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

புதைகுழியில் இருந்து மீட்கப்பட்ட 335 எலும்புக்கூடுகளில், தெரிவு செய்யப்பட்ட 6 எலும்பக்கூடுகளின் மாதிரிகள் அமெரிக்காவுக்கு அனுப்பப்பட்டு, புளோரிடாவில் உள்ள ஆய்வகத்தில் கார்பன் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.
இந்த ஆய்வு முடிவுகள் அதிகாரபூர்வமாக நேற்றுமுன்தினம் மன்னார் நீதிவான் நீதிமன்றத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

இந்த நிலையில் புதைகுழி அகழ்வைத் தொடருவதா நிறுத்துவதா என்று இன்னமும் முடிவு செய்யப்படவில்லை என்றும், முடிவு எடுக்கப்படும் வரையில் அகழ்வுப் பணி முன்னெடுக்கப்படும் என்றும் சட்ட மருத்துவ அதிகாரி சமிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

About Jaseek

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

x

Check Also

கஜேந்திரன் எம்.பிக்கு பிணை !

யாழ்ப்பாணம் நல்லூரில் கைது செய்யப்பட்ட தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரன் ...

Social Media Auto Publish Powered By : XYZScripts.com