மன்னாரில் வெளிக்கடை சிறைச்சாலை படுகொலையின் 33ஆம் ஆண்டு நினைவு தினம் அனுஸ்ரிப்பு.(படம்)

வெளிக்கடை சிறைச்சாலையில் படுகொலை செய்யப்பட்ட தமிழ் ஈழ விடுதலை இயக்கம்(டெலே) முக்கியஸ்தர்கள் உற்பட 53 அரசியல் கைதிகள் மற்றும் பொது மக்களின் 33 ஆவது ஆண்டு நினைவஞ்சலி நிகழ்வான ‘தமிழ் தேசிய வீரர்கள் தினம்’ புதன் கிழமை(27) காலை மன்னாரில் உள்ள தமிழ் ஈழ விடுதலை இயக்கம்(டெலோ) மாவட்ட தலைமை அலுவலகத்தில் இடம் பெற்றது.

-தமிழ் ஈழ விடுதலை இயக்கம்(டெலோ) மாவட்ட துணை அமைப்பாளர் ஏ.ரி.மோகன் ராஜ் தலைமையில் இடம் பெற்ற குறித்த அஞ்சலி நிகழ்வில் தமிழ் ஈழ விடுதலை இயக்கம் (டெலோ) மாவட்ட அமைப்பாளர் பற்றிக் வினோஇதலைமை குழு உறுப்பினர் கணேசலிங்கம் சொக்கன்இ ஈ.பி.ஆர்.எல்.எப். அமைப்பின் மாவட்ட அமைப்பாளர் எஸ்.ஆர்.குமரேஸ் மற்றும் டெலோ அமைப்பின் முக்கியஸ்தர்கள்இஉறுப்பினர்கள் என பலர் கலந்து கொண்டு அஞ்சலி செலுத்தினர்.

-இதன் போது வெளிக்கடை சிறைச்சாலையில் படுகொலை செய்யப்பட்ட தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் தளபதி குட்டிமணிஇதலைவர் தங்கத்துரைஇமுன்னனிப் போராளி ஜெகன் மற்றும் போராளிகள்இபொது மக்கள் உற்பட 53 பேரூக்கும் அஞ்சலி செலுத்தப்பட்டது.33 ஆவது தமிழ் தேசிய வீரர்கள் தினமான இன்று (27) 33 சுடர்கள் ஏற்றப்பாட்டு மலர் தூவி அஞ்சலி அசெலுத்தப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
DSC_0232 DSC_0236 DSC_0237 DSC_0240 DSC_0242 DSC_0243 DSC_0244 DSC_0255 DSC_0271

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Social Media Auto Publish Powered By : XYZScripts.com