சற்று முன்
Home / செய்திகள் / மன்னாரில் மின்னல் தாக்கம் – 03 விடுகளில் சேதம்

மன்னாரில் மின்னல் தாக்கம் – 03 விடுகளில் சேதம்

மன்னாரில் இன்று அதிகாலை இடி மற்றும் மின்னல் தாக்கம் ஏற்பட்டு 3 வீடுகள் சேதமடைந்தன எனத் தெரிவிக்கப்பட்டது.

மன்னார் மூர்வீதி மற்றும் சாவக்கட்டு பகுதியில் உள்ள 3 வீடுகள் மீது மின்னல் தாக்கியுள்ளது. இதன் போது வீடுகளில் இருந்த பெறுமதி மிக்க மின் சாதனப்பொருள்கள் சேதமடைந்துள்ளன. வீடுகளில் உள்ள தென்னை மரங்கள் மீதும் மின்னல் தாக்கியுள்ளது.

வீடுகளில் அனைவரும் உறக்கத்தில் இருந்த நிலையில் மின்னல் தாக்கியுள்ளது. -எனினும் உயிர் ஆபத்துக்கள் ஏற்படவில்லை.

சம்ப இடங்களை பொலிஸார்,இராணுவத்தினர்,பிரதேச செயலக அதிகாரிகள், மாவட்டச் செயலக அதிகாரிகள்,இடர் முகாமைத்துவ பிரிவு அதிகாரிகள் பாதீக்கப்பட்ட வீடுகளுக்குச் சென்று பார்வையிட்டுள்ளனர்.

About Jaseek

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

x

Check Also

கஜேந்திரன் எம்.பிக்கு பிணை !

யாழ்ப்பாணம் நல்லூரில் கைது செய்யப்பட்ட தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரன் ...

Social Media Auto Publish Powered By : XYZScripts.com