மன்னாரில் கைக்குண்டுகள் மீட்பு!

மன்னார் நாயட்டு வெளிப்பகுதிக்கு அருகில் விடுதலைப்புலிகளின் காவலரண் அமைந்திருந்த இடத்தில் இருந்து 9 கைக்குண்டுகளை நேற்றையதினம் பிற்பகல் 12.30 மணியளவில் மன்னார் பொலிஸார் மீட்டுள்ளனர்.
மன்னார் நாயட்டுவெளிசந்தியில் இருந்து பரபரப்புக்கடத்தான் வரையாக ஊடறுத்து செல்லும் பகுதியில் விடுதலைப்புலிகளின் பாதுகாப்பு அரண் ஒன்று அமைந்திருந்த இடத்தில் கைக்குண்டு இருப்பதாக பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் நேற்றையதினம் அப்பகுதிக்கு பொலிஸார் சென்றுள்ளனர்.
குறித்த பகுதியில் பழைய உரப்பை ஒன்றுக்குள் காணப்பட்ட 9 கைக்குண்டுகளை பொலிஸார் மீட்டதுடன் அவற்றை நீதிமன்றத்தின் கவனத்துக்கும் பாரப்படுத்தியிருந்தனர். அதில் 4 கைக்குண்டுகள் பழுதடைந்த நிலையில் காணப்பட்டதுடன் 5 கைக்குண்டுகள் பழுதடையாத நிலையில் காணப்பட்ட காரணத்தால் அவற்றை செயலிழக்க செய்வதற்காக நீதிமன்றின் உத்தரவுக்கமைய குண்டு செயலிழக்கும் விசேட பிரிவினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Social Media Auto Publish Powered By : XYZScripts.com