மன்னாரில் அதி சக்தி வாய்ந்த வெடிபொருட்கள் மீட்பு!

மன்னாரில் அதி சக்தி வாய்ந்த வெடிபொருட்கள் சிலவற்றை இராணுவத்தினர் நேற்று (4) கைப்பற்றியுள்ளதாக தகவல் கிடைத்துள்ளது.

மன்னார் மாவட்டம் மாந்தை மேற்கு பிரதேச செயலாளர் பிரிவுக்குற்பட்ட பாப்பாமோட்டை கிராம அலுவலகர் பிரிவில் உள்ள காட்டுப் பகுதியில் இருந்தே இந்த வெடி பொருட்கள் மீட்கப்பட்டுள்ளதாக பாதுகாப்புத்துறைத் தகவல்கள் தெரிவித்துள்ளன.

குறித்த வெடி பொருட்கள் தொடர்பில் மன்னார் நீதிமன்றத்தின் கவனத்திற்குக் கொண்டு வரப்பட்டது. பின்னர் நீதிமன்ற உத்தரவின் பிரகாரம், இந்த வெடிபொருட்கள் அடம்பன் பிரதேச பொலிஸார், இராணுவத்தினர், மற்றும் விமானப்படையினர் ஆகியோரால் அங்கிருந்து அகற்றப்பட்டுள்ளன. வெடிபொருட்கள் மீட்கப்பட்டபோது மாந்தை மேற்கு பிரதேசச் செயலாளர் எஸ்.கேதீஸ்வரன், பாப்பாமோட்டை கிராம அலுவலகர் ஆகியோர் குறித்த இடத்தில் பிரசன்னமாகியிருந்தனர்.

உச்சக்கட்ட போர் இடம்பெற்ற பகுதியான இங்கு, தமிழீழ விடுதலைப் புலிகள் விட்டுச் சென்ற ஆயுதமாக இந்த வெடிபொருட்கள் இருக்கலாம் என பாதுகாப்புத் தரப்பை மேற்கோள் காட்டி செய்திகள் வெளியாகியுள்ளன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

vakeesam Like Page close[x]
Or wait 30 seconds
Social Media Auto Publish Powered By : XYZScripts.com