மனித உரிமை பேரவைக்கான தனது கடப்பாட்டை இலங்கை நிறைவேற்ற வேண்டும்

யுத்தகால துஷ்பிரயோகங்களிற்கு பொறுப்புக்கூறும் நடைமுறைகளில் சர்வதேச நீதிபதிகளும், வழக்கு தொடுநர்களும் குறிப்பிடத்தக்க பங்காற்றுவதை உறுதிசெய்வதன் மூலம், ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவைக்கான தனது கடப்பாட்டை இலங்கை அரசாங்கம் நிறைவேற்ற வேண்டும் என சர்வதேச மனித உரிமைகள் கண்காணிப்பகம் வேண்டுகோள் விடுத்துள்ளது. 

கடந்த ஜனவரி 21ம் திகதி வௌிநாட்டு ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய செவ்வியில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன “வௌிநாட்டு நீதிபதிகளின் பங்களிப்பை ஏற்கப் போவதில்லை” எனக் குறிப்பிட்டிருந்தார். 

உள்நாட்டுப் பிரச்சினையைத் தீர்க்க போதுமான வல்லுனர்கள், நிபுணர்கள் மற்றும் புத்திஜீவிகள் இலங்கைக்குள்ளேயே உள்ளதாகவும் அவர் இதன்போது சுட்டிக்காட்டினார். 

நீதி மற்றும் பொறுப்புக்கூறலை உறுதிசெய்வதற்காக இலங்கை அரசாங்கம் சர்வதேச பங்களிப்பை கோரியது, எனவே அதிலிருந்து தற்போது பின்வாங்க கூடாது என, சர்வதேச மனித உரிமை கண்காணிப்பகத்தின் ஆசியாவிற்கான இயக்குநர் பிரட் அடம்ஸ் குறிப்பிட்டுள்ளார். 

சர்வதேச பங்களிப்பு குறித்து ஐக்கிய நாடுகளிற்கு அளிக்கப்பட்ட வாக்குறுதி நிச்சயமில்லாத ஒன்றல்ல மாறாக பாதிக்கப்பட்ட ஆயிரக்கணக்கானவர்களுக்கு அளிக்கப்பட்ட உறுதியான வாக்குறுதி என்பதை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன புரிந்துகொள்ள வேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார். 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

vakeesam Like Page close[x]
Or wait 30 seconds
Social Media Auto Publish Powered By : XYZScripts.com