சற்று முன்
Home / Uncategorized / மத போதகருடன் நெருங்கி பழகிய 17 பேர் பலாலி முகாமில் தங்கவைப்பு

மத போதகருடன் நெருங்கி பழகிய 17 பேர் பலாலி முகாமில் தங்கவைப்பு

சுவிஸ் நாட்டிலிருந்து இலங்கைக்கு வந்த மதபோதகருடன் நேரடியாக தொடர்புகளை பேணிய 18 நபர்களில் 17 பேர் பலாலி இராணுவ முகாம் பகுதியில் அமைக்கப்பட்டுள்ள கொரோனா தனிமைப்படுத்தல் நிலையத்தில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

மேலும் ஒருவர் வவுனியா சென்றுவிட்டதால் வவுனியாவில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளார்.

இத்தகவலை யாழ்ப்பாணம் மாவட்டச் செயலர் வெளியிட்டுள்ளார்.

இன்று நண்பகல் யாழ் மாவட்டச் செயலகத்தில் நடைபெற்ற ஊடக சந்திப்பின்போதே அவர் மேற்கண்ட தகவலை வழங்கினார்.

அரியாலையில் ஆராதனைக் கூட்டம் நடத்துவதற்கு சுவிஸிலிருந்து வந்த மதபோதகருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது.

அவருடன் ஓர் அறையில் தனித்துச் சந்தித்த தாவடி வாசிக்கும் கொரோனா இருப்பது உறுதியானது. இதனையடுத்து மதபோதகருடன் நெருங்கிப் பழகிய 18 பேர் அடையாளப்படுத்தப்பட்டனர்.

இவர்களில் 12பேர் நேற்றுக் காலையும் எஞ்சிய 6 பேர் நேற்று மாலையும் தனிமைப்படுத்தல் மையங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.

About Jaseek

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

x

Check Also

ஆயுதம் மேல் நம்பிக்கையுள்ளோர் வாக்களிக்காதீர்கள்!

நான் உங்களுக்கு தரும் வாக்குறுதி ஆயுதம் இல்லாமல் வன்முறை இல்லாமல் அஹிம்சை மூலம் ராஜதந்திர நகர்வுகள் ...

Social Media Auto Publish Powered By : XYZScripts.com