சற்று முன்
Home / செய்திகள் / மத பிரச்சாரத்திற்காக சுவிசில் இருந்து யாழ் வந்து சென்ற போதகருக்கு கொரோனா – உடன் இருந்தவர்களை தனிமைப்படுத்த நடவடிக்கை

மத பிரச்சாரத்திற்காக சுவிசில் இருந்து யாழ் வந்து சென்ற போதகருக்கு கொரோனா – உடன் இருந்தவர்களை தனிமைப்படுத்த நடவடிக்கை

சுவிஸ் நாட்டிலிருந்து கடந்த வாரம் மத போதனைக்காக யாழ்ப்பாணம் வருகைதந்த மத போதகர் ஒருவர் யாழில் பல தேவாலயங்களில் மத போதனையில் ஈடுபட்டுவிட்டு மீண்டும் சுவிஸ் சென்றிருந்த நிலையில் அவருக்கு கொரோனா நோய்க்கிருமித் தொற்று இருப்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. அவர் சுவிசில் தீவிர சிகிச்சைக்கு உட்படுத்தப்பட்டுள்ளார்.

இச் சம்பவமானது ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்படும் வரை கொரோன பற்றிய எதுவித அச்சமுமின்றி அறிவிக்கப்பட்டிருந்த விடுமுறையை கொண்டாடித் தீர்த்த யாழ் குடாநாட்டு மக்களிடையே ஒருவித பயம் கலந்த அச்சநிலையைத் தோற்றுவித்துள்ளது.

இந்நிலையில் குறித்த மதபோதகர் யாழில் மதப் பிரச்சாரத்தில் ஈடுபட்ட தேவாலயங்கள் அவர் தங்கியிருந்த இடங்கள் மற்றும் நெருக்கமாகப் பழகிய நபர்கள் குறித்து கவனம் செலுத்தப்பட்ட நிலையில் சிலர் கொரோனா நோய்த் தொற்றுச் சந்தேகம் காரணமாக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இவர் கடந்த ஞாயிறன்று மதபோதனையில் ஈடுபட்ட யாழ்ப்பாணம் செம்மணி பகுதி இளையதம்பி வீதியில் அமைந்துள்ள பிலதெப்பியா கிறிஸ்தவ தேவாலயத்தில் சுமார் 150 பேர் ஒன்றுகூடியிருந்மை தெரியவந்துள்ளது. அவர்களைத் தனிமைப்படுத்தும் நடவடிக்கைகளில் பொலிசார் மற்றும் சுகாதார வைத்தய அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர்.

இச் சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது,

யாழ்ப்பாணம் செம்மணி பகுதி இளையதம்பி வீதியில் அமைந்துள்ள பிலதெப்பியா கிறிஸ்தவ தேவாலயத்தில் கடந்த ஞாயிற்றுக்கிழமை (15) இடம்பெற்ற வழிபாட்டின் போது சுவிஸ் நாட்டிலிருந்து வருகை தந்த தலைமை போதகர் அவர்களால் சிறப்பு வழிபாடு நடத்தப்பட்டிருக்கிறது.
இதேபோல் யாழ் குடாநாட்டில் தமது சபைக்குரிய பல தேவாலயங்களிலும் குறித்த மத போதகர் சிறப்பு வழிபாடுகளில் ஈடுபட்டிருக்கிறார்.

அவர் அதற்கு இரண்டு நாட்களுக்கு முன்னர் தான் அவர் சுவிஸ் நாட்டிலிருந்து யாழ்பாணத்திற்கு வருகை தந்துள்ளார். குறித்த மத போதகருக்கு விமான நிலையத்திலும் எவ்வித பரிசோதனைகளும் இடம்பெற்ற்றிருக்கவில்லை எனக் கூறப்படுகின்றது.

யாழில் தனது மத போதனைகளை முடித்துவிட்டு குறித்த மத போதகர் சுவிஸ் நாட்டிற்கு மீண்டும் சென்றிருந்த நிலையில் அவருக்கு கோரோனா தொற்று இருப்பது தெரியவந்தது

About Jaseek

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

x

Check Also

நந்திக்கடலில் மலர்தூவி அஞ்சலி

மாவீரர்நாள் 2021 நந்திக்கடலில் மலர்தூவி அஞ்சலி செலுத்தினார் முன்னாள் வடமாகாண சபை உறுப்பினர் துரைராசா ரவிகரன்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com