மத்திய வங்கியின் புதிய ஆளுநராக கலாநிதி இந்திரஜித் குமாரசுவாமி!

Central Bankஇலங்கை மத்திய வங்கியின் ஆளுநராக கலாநிதி இந்திரஜித் குமாரசுவாமியை நியமனம் செய்வதற்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.
ஜனாதிபதி மற்றும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கு இடையில் நடைபெற்ற கலந்துரையாடலைத் தொடர்ந்தே இத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது. அதனைத் தொடர்ந்து இவ் நியமன நிகழ்வு எதிர்வரும் திங்கட்கிழமை(04) உத்தியோகபூர்வமாக நடைபெறவுள்ளது.

66 வயதுடைய கலாநிதி இந்திரஜித் குமாரசுவாமி நாட்டின் பிரபல பொருளியல் நிபுணராவார். கொழும்பு றோயல் கல்லூரி, மற்றும் இலண்டன் ஹரோ பாடசாலையில் தனது கல்வியினைக் கற்ற இவர், தனது இளமானிப்பட்டத்தினை இலண்டன் கேம்பிரிஜ் பல்கலைக்கழகத்தில் (Cambridge University) பெற்றுள்ளார். அதன் பின்னர் தனது கலாநிதிப் பட்டத்தினை சசெக்ஸ் பல்கலைக்கழகத்தில் (University of Sussex) பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

1973 ஆம் ஆண்டில் இலங்கை மத்திய வங்கியில் இணைந்த இவர், பொருளாதார ஆய்வு, புள்ளிவிபரவியல், மற்றும் வங்கி மேற்பார்வை பிரிவுகளில் சிறந்ததொரு அதிகாரியாக 1989 ஆம் ஆண்டு வரை பணியாற்றியுள்ளார். அத்துடன் 1981 ஆம் ஆண்டிலிருந்து 1989 ஆம் ஆண்டு வரையான காலப்பகுதியில் நிதி திட்டமிடல் அமைச்சின் வழிமொழி அதிகாரியாகவும் இவர் பணியாற்றியுள்ளார்.

அதனையடுத்து பொதுநலவாய செயலகத்தின் பொருளாதார விவகார பிரிவின் பணிப்பாளர், செயலாளர் நாயகத்தின் அலுவலக பிரதிப் பணிப்பாளர் போன்ற பதவிகளில் 1990 ஆம் ஆண்டு காலப்பகுதியிலிருந்து 2008 ஆம் ஆண்டு வரையான காலப்பகுதியில் பணியாற்றினார். அத்துடன் சமூக மாற்ற நிகழ்ச்சித்திட்டப் பிரிவின் இடைக்காலப் பணிப்பாளர் தலைமையாக மீண்டும் பொதுநலவாய செயலகத்தில் பணியாற்றிய இவர், பொருளாதார சமூக விடயங்களில் சிறந்து விளங்கிய ஒருவராவார்.

மேலும் கேம்பிரிஜ் பல்கலைக்கழக கிரிக்கெட் குழுவின் முதல்தர கிரிக்கெட் வீரராக 1971 ஆம் ஆண்டிலிருந்து 1972 ஆம் ஆண்டு வரை பதவி வகித்துள்ளார். கிரிக்கெட் விளையாட்டு மட்டுமன்றி ரக்பி விளையாட்டுத்துறையிலும் சிறந்து விளங்கிய இவர், கேம்பிரிஜ் பல்கலைக்கழகத்திக் ரக்பி அணியில் விளையாடியதுடன் மட்டுமன்றி, 1974 ஆம் ஆண்டில் இலங்கை ரக்பி விளையாட்டுக் கழகத்தின் தலைவராகவும் இருந்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

vakeesam Like Page close[x]
Or wait 30 seconds
Social Media Auto Publish Powered By : XYZScripts.com