மத்திய மாகாணம் தமிழ் கல்வியில் முன்றேற்றம் கண்டுள்ளது – மத்திய மாகாண முதலமைச்சர் சரத் ஏக்கநாயக்கா

மத்திய மாகாணத்தில் நூற்றுக்கு இருபது வீதமாக காணப்பட்ட பாடசாலை தமிழ் கல்வி முன்னேற்றம். இப்பொழுது நூற்றுக்கு 90 வீதமாக உயர்ந்துள்ளது. இதற்கு வித்திட்டவர் இ.தொ.கா தலைவர் அமரர். சௌமிய மூர்த்தி தொண்டைமான் ஆவார் என பெறுமிதத்துடன் மத்திய மாகாண முதலமைச்சர் சரத் ஏக்கநாயக்கா தெரிவித்தார்.

தலவாக்கலையில் நடைபெற்ற மத்திய மாகாண தைப்பொங்கல் நிகழ்வில் பிரதம அதிதியாக கலந்து கொண்டு உரை நிகழ்த்துகையில் அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

இங்கு அவர் மேலும் தெரிவித்ததாவது,

தலவாக்கலை 90 வீத தமிழ் மக்கள் வாழும் பிரதேசமாகும். தைப்பொங்கல் திருநாள் தெய்வங்கள் தொடர்பாகவும் விவசாயிகள் மற்றும் பாரம்பரிய கலாச்சாரத்தை பேணி பாதுகாக்கும் வகையில் தமிழ் மக்களால் கொண்டாடும் ஒர் உன்னத விழாவாகும்.

இவ்விழாவினை நாட்டில் உள்ள அனைத்து இன மக்களும் (முஸ்லிம்க்கள் உட்பட) கொண்டாடுகின்ற கலாச்சாரம் நமது நாட்டில் உருவாகியுள்ளது. இது சந்தோசத்திற்குறிய விடயமாகும்.

மத்திய மாகாண கல்வி அமைச்சரின் ஊடாக சென்ற வருட தைபொங்கலை முன்னிட்டு கூட ராஜகிரிய ரணவிரு சிங்கள வித்தியாலய மாணவர்கள் இரண்டாயிரம் பேரை அழைத்து வந்து தைப்பொங்கல் தொடர்பிலும் அதன் கலாச்சார கோட்பாடுகள் தொடர்பிலும் கண்டறிய செய்தோம்.

இன்று இன வேறுபாடுகள் இல்லாமல் நாடாளாவிய ரீதியில் கொண்டாடும் நிலை உருவாகியுள்ளது.

அமைச்சர் ராமேஸ்வரன் அவர்கள் கலாச்சார விழுமியங்களை காத்து மாணவர்களை அதன் வழியில் பின்பற்ற வைப்பதில் நேரமான வழியில் செல்பவர். அவரின் இந்த ஆற்றலை பாராட்டுவதுடன் அவருக்கும் தமிழ் கல்வி வளர்ச்சிக்கும் என்றும் ஆதரவளிப்பேன் என்றார்.

மலையகத்தின் கல்வி வளர்ச்சிக்கென இலங்கை தொழிலாளர் காங்கிரசும் அதன் தலைவர்களும் அயராது பாடுப்பட்டுள்ளனர். இந்த வகையில் இ.தொ.கா. மூவாயிரம் ஆசிரியர்களை நியமிக்காமல் இருந்திருந்தால் இன்று நூற்றுக்கு 90 வீத கல்வி முன்னேற்றத்தினை கண்டியிருக்க முடியாது என பெருமிதம் கொண்டார்.

பாடசாலை மாணவர்களிடத்தில் நாகரீக வளர்ச்சியையும், கலாச்சார விழுமியங்களும் ஊட்டி செல்வதில் அமைச்சர் ராமேஸ்வரன் முழுமனதுடன் செயல்படுபவர்.

இனங்களுக்கிடையே கலாச்சாரத்தினை புரிந்து கொள்ளும் வகையில் மத்திய மாகாணத்தினூடாக நாம் செயலாற்றுகின்றோம்.

இதனால் ஒரு தாய் பிள்ளைகளைப் போல இந்த தைதிருநாளை மத்திய மாகாணத்தில் அனைவரும் கொண்டாடுகின்றோம் என அவர் மேலும் தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Social Media Auto Publish Powered By : XYZScripts.com