சற்று முன்
Home / செய்திகள் / மத்திய அரசின் சட்டமூலத்தை தொடர்ச்சியாகத் தோற்கடித்துவரும் மாகாண சபைகள்

மத்திய அரசின் சட்டமூலத்தை தொடர்ச்சியாகத் தோற்கடித்துவரும் மாகாண சபைகள்

மாகாண சபைகளின் அங்கீகரத்தை பெற்றுக் கொள்வதற்காக அரசாங்கத்தினால் சமர்பிக்கப்பட்ட அபிவிருத்தி விஷேட ஏற்பாடுகள் சட்டமூலம் வடமாகாண சபை மற்றும் வடமத்திய மாகாண சபையினால் நிராகரிக்கப்பட்டது.

வடமாகாண சபையின் அனைத்து உறுப்பினர்களும் ஒருமனதாக அதனை நிராகரித்ததாக வடமாகாண சபையின் எதிர்க்கட்சித் தலைவர் தவராசா கூறினார்.

அபிவிருத்தி விசேட ஒழுங்குகள் சட்ட மூலத்திற்கு வட மாகாண சபை தமது கடுமையான எதிர்ப்பினை தெரிவித்துள்ளது.

இதேபோல வட மத்திய மாகாண சபையில் அந்த சட்டமூலத்திற்கு ஆதரவாக 09 வாக்குகளும் எதிராக 19 வாக்குகளும் பதிவாகியுள்ளன. முன்னராக ஊவா மாகாண சபையும் குறித்த சட்டமூலத்தை நிராகரித்திருந்தது.

குறித்த சட்டமூலத்திற்கு மாகாண சபைகளின் அங்கீகரத்தை பெற்றுக் கொள்வதற்கு அரசாங்கம் தீர்மானித்திருந்த நிலையில், சகல மாகாண சபைகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

இதற்கமைய வடமாகாண சபைக்கும் வடமாகாண ஆளுநர் ஊடாக 14.12.2016ம் திகதி அனுப்பி வைக்கப்பட்டிருந்த சட்டமூலம் இன்றைய தினம் சபையில் உறுப்பினர்களின் கருத்துக்களை அறிவதற்காக எடுத்துக்கொள்ளப்பட்டது.

ஆளுங்கட்சி, எதிர்கட்சி உறுப்பினர்களும் இந்த சட்டமூலத்தை எதிர்ப்பதாக கூறியதுடன், அரசாங்கம் ஒரு கையால் கொடுத்து மற்ற கையால் பிடுங்கும் ஒரு நாடகத்தை ஆடி வருவதாக வடமாகாண சபை குற்றம்சாட்டியுள்ளது.

About Jaseek

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

x

Check Also

ஆரியகுளத்தில் மத அடையாளங்களுக்கு இடமில்லை !

யாழ் மாநகர சபைக்கு சொந்தமான ஆரியகுளத்தில் எந்த விதமான மத அடையாளங்களையும் அமைக்க அனுமதிக்க முடியாது ...

Social Media Auto Publish Powered By : XYZScripts.com