மணிக்கூட்டுக் கோபுரத்தின் மணிக்கூடு இயங்கவில்லை !!

 

யாழ்ப்பாணம் மணிக்கூட்டுக் கோபுரத்தில் உள்ள மணிக்கூடுகள் நீண்ட காலமாக இயங்காமல் காணப்படுகிறது. இது தொடர்பில் யாழ்.மாநகர சபைக்கு பல முறை அறிவித்தும் இதுவரையும் எந்தவித நடவடிக்கைகளும் எடுக்கப்படவில்லை என மக்கள் விசனம் தெரிவித்துள்ளனர்.

யாழ்.மாநகர முதல்வராக திருமதி யோகேஸ்வரி பற்குணராசா கடமையாற்றிய போது முன்னாள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா பணிப்புரைக்கமைவாக யாழ்.மாநகர சபையால் 34 இலட்சம் ரூபா செலவில் குறித்த மணிக்கூட்டுக் கோபுரம் மறுசீரமைக்கப்பட்டு (16-05-2013) அன்று திறந்து வைக்கப்பட்டது.

இந்நிலையில் கடந்த 5 மாதங்களாக அதில் காணப்படும் மணிக்கூடுகள் இயங்காது பழுதடைந்த நிலையில் உள்ளது. யாழ்ப்பாணம் வரும் சுற்றுலா பயணிகளைக் கவரும் முக்கிய இடங்களில் ஒன்றாக யாழ்ப்பாண மணிக்கூடு கோபுரம் காணப்படுவதுடன் தற்போது பறவைகளின் வசிப்பிடமாக அது மாறியுள்ளது.

ஆனால் இம் மணிக்கூடு கோபுரத்தை சுற்றி தமிழ் மன்னர்களின் சிலைகளும் அருகில் நூலகமும் இருப்பதால் இவ்விடம் சுற்றுலா பயணிகளை கவரும் இடமாக இருக்கிறது. பழமை வாய்ந்த இக்கோபுரத்தின் மணிக்கூடுகளை திருத்தி மீள இயங்கவைப்பதற்கான நடவ டிக்கைகளை விரைந்து எடுக்க வேண்டும் என பொதுமக்கள் சமூக ஆர்வலர்கள் உட்பட பலர் கேட்டு கொண்டுள்ளனர்

இந்த மணிக்கூட்டினை திருத்தி மீள இயங்க வைக்க வேண்டியது யாழ்.மாநகர சபையின் சம்பந்தப்பட்ட அதிகாரிகளின் கடமையாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

vakeesam Like Page close[x]
Or wait 30 seconds
Social Media Auto Publish Powered By : XYZScripts.com