மணற்காட்டில் தீ .

வடமராட்சி கிழக்கு மணற்காட்டு பிரதேசத்தில் உள்ள சவுக்கங்காடுகளுக்கு விசமிகள் தீ மூட்டியமையால் 4 ஏக்கர் சவுக்கங்காடு அழிவடைந்துள்ளதாக வடமராட்சி கிழக்கு மருதங்கேணி பிரதேச செயலாளர் கே.கனகேஸ்வரன் தெரிவித்துள்ளார்.
மணற்காட்டில் உள்ள சவுக்கு மரங்களுக்கு திங்கள் கிழமை மாலை விஷமிகளால் தீ வைக்கபட்டது அதனை அடுத்து காட்டில் ஏற்பட்ட பெரும் தீயினை யாழ்.மாநகர சபை தீயணைப்பு பிரிவினர் , பொலிசார் . இராணுவத்தினர் , மற்றும் பொது மக்கள் பலர் ஒன்றிணைந்து பெரும் போராட்டத்திற்கு மத்தியில் தீயினை அணைத்தனர்.
குறித்த தீ விபத்தினால் சுமார் 4 ஏக்கர் நிலப்பரப்பில் இருந்த சவுக்க மரங்கள் தீயில் எரிந்துள்ளன.
குறித்த பகுதிகளில் சட்டவிரோதமான முறையில் சவுக்க மரங்களை விறகுகளுக்காக வெட்டி செல்லும் கும்பல்களே சவுக்க மரங்களுக்கு தீ மூட்டு கின்றனர். என குற்றம் சாட்டப்படுகின்றது.
இவ்வாறு தீ மூட்டும் கும்பல்களை கைது செய்யவேண்டும் எனவும் விறகு தேவைக்காக சட்டவிரோதமான முறையில் மரங்களை வெட்டு வோரை கட்டுப்படுத்த உடனடியாக நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

vakeesam Like Page close[x]
Or wait 30 seconds