சற்று முன்
Home / செய்திகள் / மட்டுவிலில் நள்ளிரவு வேளை வங்கிப் பணியாளரின் வீட்டின் மீது தாக்குதல் – மட்டுவில் சந்தியிலும் அடாவடி

மட்டுவிலில் நள்ளிரவு வேளை வங்கிப் பணியாளரின் வீட்டின் மீது தாக்குதல் – மட்டுவில் சந்தியிலும் அடாவடி

மட்டுவில் வின்சன் வீதியில் உள்ள வீடு ஒன்றின் மீது நள்ளிர வேளை (சற்று முன்) வாள் மற்றும் கொடாரிகளால் சரமாரியான தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இதனால் அப்பகுதியில் பதற்றமான சூழல் நிலவுவதாக அங்கிருந்து கிடைத்த தகவல்கள் தெரிவித்தன.

இச் சம்பவம் தொடர்பில் சாவகச்சேரிப் பொலிஸார் மற்றும் 119 அவசரப் பொலிஸாருக்கு அறிவித்தல் கொடுத்த போதும் இதுவரை சம்பவ இடத்திற்கு பொலிஸார் செல்லவில்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த வீட்டின் உரிமையாளர் யாழ்ப்பாணம் HNB வங்கிப் பணியாளரும் சமாதான நீதவானுமாவார்.

இவரது வீட்டிற்கு தலைக் கவசம் இல்லாது இலக்கத் தகடுகள் அற்ற மோட்டார் சைக்கிளில் சென்ற மர்ம நபர்களே தாக்குதல் நடத்தியுள்ளனர்.

தாக்குதல் நடத்திய கும்பலைச் சேர்ந்தவர்கள் எனச் சந்தேகிக்கப்படும் இருபது பேர் வரையான நபர்கள் மட்டுவில் சந்தியில் தற்போதும் ஆட்டகாசத்தில் ஈடுபட்டுள்ளதாகவும் தெரியவந்தள்ளது.

இதனால் அப்பகுதி மக்கள் பதற்றமான நிலையில் காணப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

About Jaseek

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

x

Check Also

கஜேந்திரன் எம்.பிக்கு பிணை !

யாழ்ப்பாணம் நல்லூரில் கைது செய்யப்பட்ட தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரன் ...

Social Media Auto Publish Powered By : XYZScripts.com