மட்டக்களப்பு அரசாங்க அதிபருக்கு எதிராக ஆர்ப்பாட்டம்!

மட்டக்களப்பு மாவட்டத்தின் ஊழல் நிர்வாகத்திற்கு காரணமான அரசாங்க அதிபர் பி.எஸ்.எம் சாள்ஸ் சை கைது செய்து விசாரணை செய்யுமாறு கோரி இன்று (11) பொது அமைப்புக்கள் மற்றும் பொதுமக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அவ் ஆர்ப்பாட்டம் மட்டக்களப்பு காந்தி பூங்கா முன்றலில் நடை பெற்றது.

மாவட்ட செயலாளரை இடமாற்றக் கோரியும் இடமாற்றம் செய்யப்பட்டுள்ள இரு பிரதேச செயலாளர்களின் இடமாற்றங்களை இரத்து செய்யக்கோரியும் மட்டக்களப்பு அரச அதிபரை கைது செய்யுமாறு வலியுறுத்தியும் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்ட மக்கள் தமது மகஜரில் குறிப்பிட்டு அதே அரசாங்க அதிபரிடமே கையளித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

vakeesam Like Page close[x]
Or wait 30 seconds
Social Media Auto Publish Powered By : XYZScripts.com