மட்டக்களப்பில் விபத்தில் இளைஞன் உயிரிழப்பு!

மட்டக்களப்பு-கல்முனை, களுதாவளை பகுதியின் இன்று(23)  காலை இடம்பெற்ற விபத்தில் இளைஞர் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார் என களுவாஞ்சிகுடிக் பொலிஸார் தெரிவித்தனர்.

களுதாவளையைச் சேர்ந்த ம.இதயராஜ் (வயது-22) என்ற இளைஞனே உயிரிழந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

மோட்டார் சைக்கிளில் சென்றுகொண்டிருந்த குறித்த இளைஞன், முன்னே சென்ற பிக்கப் ரக வாகனத்தை முந்திச் செல்ல முற்பட்ட வேளையில், அந்த வாகனத்தில் மோதி கீழே வீழ்ந்துள்ளார்.

இந்த நிலையில், எதிரே வந்த தனியார் பேருந்து, மோட்டார் சைக்கிளுக்கு மேல் ஏறியமையால், இந்த விபத்துச் சம்பதித்துள்ளது.

இது தொடர்பில் பேருந்து சாரதி கைதுசெய்யப்பட்டுள்ளார் என்பதுடன் பேருந்தும் தடுத்துவைக்கப்பட்டுள்ளதாக, களுவாஞ்சிகுடி பொலிஸார் தெரிவித்தனர்.

சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை களுவாஞ்சிகுடி பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Social Media Auto Publish Powered By : XYZScripts.com