மட்டக்களப்பில் யானை தாக்கி 6 வயது சிறுமி உயிரிழப்பு!

2e7e2c66ebbd2590e6c935837d11460f_Lமட்டக்களப்பு மாவட்டத்தின் மண்முனை மேற்கு பிரதேசச செயலாளர் பிரிவிலுள்ள வவுணதீவு கற்பக்கேணி பிரதேசத்தில் நேற்று (01) மாலை 5.40 மணியளவில் யானை தாக்கியதில் 6 வயது சிறுமி உயிரிழந்துள்ளதுடன், அவரது தந்தை படுகாயமடைந்த நிலையில் மட்டக்களப்பு போதனான வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

நேற்றைய தினம் புதன்கிழமை மாலை அவர்களது அயல் குடியிருப்புக்குச் சென்று திரும்புகையில் பற்றைக்காட்டுப் பகுதியில் மறைந்திருந்த யானை இவர்கள் மீது தாக்குதல் நடத்தியுள்ளது. இதனையடுத்து தாண்டியடி வைத்தியசாலைக்கு இருவரும் கொண்டுவரப்பட்டு பின்னர் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளனர். யானையின் தாக்குதலுக்குப் உயிரிழந்த சிறுமியின் சடலம் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் பிரேத பரிசோதனைகளுக்காக வைக்கப்பட்டுள்ளது.

சம்பவ இடத்திற்கு விரைந்த கிழக்கு மாகாண சபை உறுப்பினர் ஆர் துரைரெட்ணம் வைத்தியசாலையில் தாக்கப்பட்டவர்களைப் பார்வையிட்டதுடன், கிராம உத்தியோகத்தர் மற்றும் கிராம மக்களுடனும் சம்பவம் தொடர்பில் கேட்டறிந்து கொண்டார். அடுத்து பிரதேச செயலாளர் மற்றும் அரசாங்க அதிபர் ஆகியோருடன் யானைத் தாக்குதல் தொடர்பிலும் இப்போதுள்ள அவசரமான தேவைகள் மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்தும் தொலைபேசியூடாக கலந்துரையாடினார்.

அதனடிப்படையில் குறிப்பிட்ட யானைகளை அகற்றுவதற்கு வனவிலங்கு பரிபாலன திணைக்களத்தின் பணிப்பாளுருடன் உடனடியாக பேசி குறித்த யானையை அகற்றுவதற்கு நடவடிக்கை எடுப்பதாக அரசாங்க அதிபர் மாகாண சபை உறுப்பினர் உறுதியளித்ததாக அவர் தெரிவித்தார். இப்பிரதேச மக்கள் தொடர்ச்சியாக நடைபெறும் இந்த யானைப்பிரச்சினைகள் குறித்து விரைவான தீர்வு காணப்படவேண்டும் என்ற வகையில் வன விலங்கு பரிபாலன திணைக்களத்தினரை அழைத்த போதும் அவர்கள் சரியான முறையில் கரிசனை காட்டவில்லை என்று தெரிவிக்கின்றனர்.

எவ்வாறாயினும் மக்கள் மீது தாக்குதல் நடத்தும் யானைகளை மக்களது குடியிருப்புப் பிரதேசங்களிலிருந்து உடனடியாக அகற்றுவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என வேண்டுகொள் விடுத்தனர். தொடர்ச்சியாக நடைபெறும் யானையின் தாக்குதல்களால் வீடுகள், சொத்துக்கள், வயல்நிலங்கள், பயன்தரு மரங்கள் அழந்து வருவதுடன், உயிரிழப்புகளும் காயமடைதலும் மட்டக்களப்பில் தொடர்ந்து வருகின்றமை குறிப்பிடத்தக்கதாகும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Social Media Auto Publish Powered By : XYZScripts.com