மட்டக்களப்பில் நீள் தூண்டில் மீன்பிடி பயிற்சி

நீள் தூண்டில் மீன்பிடி என்னும் புதிய முறையிலான மீன்பிடி முறை குறித்த பயிற்சி நெறியொன்று ​நேற்று (06) மட்டக்களப்பு கடல்தொழில் நீரியல் வளத்திணைக்களத்தில் ஆரம்பமானது.
ஐரோப்பிய ஒன்றியத்தின் மட்டக்களப்பு மாவட்டத்துக்கான ஐந்து ஆண்டு அபிவிருத்தித்திட்டத்தின் (EUSDDP)  கீழ் உலக விவசாய நிறுவனத்தினால் இந்த பயிற்சி நெறி நடைமுறைப்படுத்தப்படுகிறது.
பயிச்சிகளை நாரா நிறுவனத்தின் மீன்பிடித் தொழில்நுட்பத் பிரிவின் பணிப்பாளர் என்.பி.பி.பன்னியதேவ மற்றும் உத்தியோகத்தர்கள் பயிற்சிகளை வழங்குகின்றனர்.
இந்தப் பயிற்சி நெறியில் மட்டக்களப்பு மாவட்டத்தின் கோரளைப்பற்று வடக்கு, கோரளைப்பற்று மேற்கு, கோரளைப்பற்று, கோரளைப்பற்று தெற்கு, ஏறாவுர் பற்று, மண்முனை வடக்கு, காத்தான்குடி, மண்முனைப்பற்று, மண்முனை தென் எருவில் பற்று உள்ளிட்ட12 பிரதேச செயலாளர் பிரிவுகளில் உள்ள 50பேர் தெரிவு செய்யப்பட்டு இரண்டு தொகுதிகளாக இந்தப் பயிற்சிகள் நடத்தப்படுகின்றன.
கடல்தொழில் நீரியல் வளங்கள் திணைக்களத்தின் மட்டக்களப்பு மாவட்ட உதவிப் பணிப்பாளர் றுக்சான் சி.குருஸ் தலைமையில் நடைபெறும் இப்பயிற்சி நெறியின் ஆரம்ப நிகழ்வில், உலக உணவு  ஸ்தாபனத்தின் திட்டமிடல் பணிப்பாளர் எஸ்.பண்டார, உத்தியோகத்தர்களும்கலந்து கொண்டனர்.
ஆழ்கடல் மீன்பிடிக்கு படகுகளில் செல்லும் வேலையாட்களை உள்ளடக்கியதாக நடைபெறும் இப்பயிற்சிகளின் நிறைவில் தலா ஒரு லட்சம் ரூபா பெறுமதியான தொழில் உபகரணங்களும் வழங்கப்படுகின்றன.
கடல் தொழிலில் இலங்கையின் தென் பகுதியில்பயன்படுத்தப்படும்உயர் தொழில் நுட்பங்களை கிழக்கு மீனவர்களுக்கும் அறிமுகப்படுத்தும் வகையில் இந்தப் பயிற்சி நெறி நடத்தப்பட்டு வருகிறது.
இந்த நீள் தூண்டல் மீன்பிடி என்னும் புதிய முறையிலான மீன்பிடி முறை எமது பிரதேசத்தில் அறிமுகப்படுத்தப்படுவதனால் எமது மாவட்டத்தின் மீனவர்கள் மத்தியில் புதிய தொழில்நுட்பம் அறிமுகப்படுத்தப்படுவதுடன், மீன் உற்பத்தியும் அதிகரிக்கும் என்று கடல்தொழில் நீரியல் வளங்கள் திணைக்களத்தின் மட்டக்களப்பு மாவட்ட உதவிப் பணிப்பாளர் றுக்சான் சி.குருஸ்  தெரிவித்தார்.
கடல்தொழில் நீரியல் வளங்கள் திணைக்களத்தின் மட்டக்களப்பு மாவட்ட உதவிப் பணிப்பாளர் றுக்சான் சி.குருஸ் தலைமையில் நடைபெறும் இப்பயிற்சி நெறியின் ஆரம்ப நிகழ்வில், உலக உணவு  ஸ்தாபனத்தின் திட்டமிடல் பணிப்பாளர் எஸ்.பண்டார, உத்தியோகத்தர்களும் கலந்து கொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Social Media Auto Publish Powered By : XYZScripts.com