மட்டக்களப்பில் நடைபெற்ற ஜோசப் பரராஜசிங்கத்தின் 12ஆவது ஆண்டு நினைவு நிகழ்வு !

 

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஜோசப் பரராஜசிங்கத்தின் 12ஆவது ஆண்டு நினைவு நிகழ்வு, இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட இளைஞர் அணியின் ஏற்பாட்டில், மட்டக்களப்பு, அரசடி தேவநாயகம் மண்டபத்தில் இன்று பிற்பகல் 3 மணியளவில் இளைஞர் அணித் தலைவர் கி.சேயோன் தலைமையில் நடைபெற்றது.
இதன்போது, ஜோசப் பரராஜசிங்கத்தின் உருவப் படத்திற்கு மலர்மாலை அணிவித்து தீபச் சுடர் ஏற்றி அஞ்சலி செலுத்தப்பட்டது. இந்நிகழ்வில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பிரதிநிதிகள், அமரரின் குடும்பத்தினர், ஆதரவாளர்கள், பொதுமக்கள், எனப் பலரும் கலந்து கொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Social Media Auto Publish Powered By : XYZScripts.com