மக்கள் மனங்களை மயக்குமா தேர்தல் இசை நிகழ்ச்சிகள் !

(31.07.20150  யாழ்ப்பாணத்தில் தேர்தல் பிரச்சாரக் கூட்டங்களிற்கு செல்வதில் மக்கள் பெரிதாக ஆர்வம் காடடாத நிலையில் இசை நிகழ்ச்சிகளை பிரச்சார மேடைகளில் நடாத்துவதனூடாக தங்கள் பிரச்சாரக் கூட்டங்களில் அதிகளவான மக்கள் கலந்துகொண்டதான தோற்றப்பாட்டினை உருவாக்கும் முயற்சியில் அரசியற் கட்சிகள் ஈடுபட்டுவருவதனை அவதானிக்க முடிகின்றது. 

இதனூடாக மக்கள் ஆதரவு குறித்த கட்சிக்கே உண்டு என்கின்ற மனரீதியான உளவியல் தாக்கம் ஒன்றினை ஏற்படுத்த முயற்சிக்கலாம் என அரசியற்கட்சிகள் நம்புவதாக இசை நிகழ்சிகளின் ஏற்பாட்டாளர் தரப்புக்கள் தெரிவிக்கின்றன. 
மருதானார்டமத்தில் நடைபெற்ற தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முதலாவது தேர்தல் பிரச்சாரக் கூட்டமும் உள்@ர் இசை நிகழ்ச்சி ஒன்றோடுதான் ஆரம்பிக்கப்பட்டிருந்தது.

ஐக்கியதேசியக்கட்சி வெள்ளிக்கிழமை (31) யாழ்ப்பாணம் முத்திரைச்சந்தியில் நடாத்துகின்ற தனது முதலாவது பொதுக்கூட்டத்தினை தென்னிந்தியாவிலிருந்து அழைக்கப்பட்ட சுப்பர் சிங்கள் பாரகர்களைக் கொண்டு நடாத்துவதற்கு ஏற்பாடுகள் செய்துள்ளதாக அறியமுடிகின்றது.

இதேவேளை ஜக்கி;ய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு யாழ்ப்பாணத்தில் நடைபெறும் தமது இறுதிப் பிரச்சாரக் கூட்டத்திற்கு தென்னிந்தியாவின் பிரபலபாடகர்களை அழைத்துவருவதற்கான முயற்சிகளில் ஈடுபட்டிருப்பதாகவும் பிரபல பாடகர்களை தேர்தல் பரப்புரைகூட்டங்களிற்கு அழைத்துவருவதற்கு கடந்த காலங்களில் எடுக்கப்பட்ட முயற்சிகள் தமிழக அரசியற் கட்சிகள் மற்றும் தமிழர் அமைப்புக்களின் தலையீட்டினால் தோல்வியில் முடிவடைந்த சம்பவங்களை மனதில்கொண்டு தமிழ்நாட்டு கலைஞர்களிற்கு மாற்றீடாக கேரளாவிலிருந்து பிரபல பாடகர்கள் மற்றும் கலைஞர்களை அழைத்துவருவதற்கான பேச்சுவார்த்தைகளில் குறித்த கட்சியினர் ஈடுபட்டுவருவதாக அறியமுடிகின்றது. 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

vakeesam Like Page close[x]
Or wait 30 seconds
Social Media Auto Publish Powered By : XYZScripts.com