மக்கள் சொத்துகள் துஷ்பிரயோகம் செய்யப்படுவதை நிறுத்துக!- கபே

ஆளுநரின் நிர்வாகத்தின் கீழ் கொண்டுவரப்பட்டுள்ள மாகாணசபைகளுக்கு சொந்தமான மக்கள் சொத்துகளை துஷ்பிரயோகம் செய்யப்படுவதை நிறுத்துவது ஆளுநர் மற்றும் மாகாணசபையின் பிரதான செயலாளர்களின் பொறுப்பாகும் என, சுதந்திரமானதும் நீதியானதுமான தேர்தலுக்கான மக்கள் இயக்கம், (கபே) சுட்டிக்காட்டியுள்ளது.

இந்த விவகாரம் தொடர்பில், அந்த இயக்கம், நேற்று (04) விடுத்துள்ள ஊடக அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

“ஆளுநரின் நிர்வாகத்தின் கீழ் கொண்டுவரப்பட்டுள்ள மாகாண சபைகளுக்கு சொந்தமான வாகனங்கள் மற்றும் ஏனைய சொத்துகளை தாம் பெற்றுக்கொள்வதற்கு, ஆளுநர் மற்றும் மாகாண சபையின் பிரதான செயலாளர் நடவடிக்கை எடுக்க வேண்டும்” என, அவ்வமைபின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கீர்த்தி தென்னக்கோன் தெரிவித்தார்.

அவர் மேலும் குறிப்பிடுகையில்,

“வடமத்திய, சப்ரகமுவ மற்றும் கிழக்கு மாகாணங்களுக்குச் சொந்தமான 32 க்கும் மேற்பட்ட வாகனங்கள் முன்னாள் முதலமைச்சர்கள், அமைச்சர்கள் மற்றும் எதிர்கட்சித் தலைவர்கள் மற்றும் அவர்களின் உத்தியோகத்தர்கள் மூலம் கொண்டுசெல்லப்பட்டுள்ளது” என்றும் அவ்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

“மாகாணசபைகளுக்கு சொந்தமான இன்னும் அதிகளவான உடமைகளை மீண்டும் கையளிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படவில்லை. அரசியல் நடவடிக்கைகளுக்காக இந்த உடமைகள் நிரந்தரமாக பயன்படுத்துவதனை கடந்த சில நாட்களாக காணக்கூடியதாக இருந்தது“ என்றும் அவர் குறிப்பிட்டார்.

“அதுமட்டுமல்லாமல், வடமத்திய மாகாணசபைக்கு சொந்தமான ஏராளமான வாகனங்கள் ஒக்டோபர் மாதம் 02ஆம் திகதி அநுராதபுரத்தில் நடைபெற்ற கூட்டங்களுக்கு உபயோகிக்கப்பட்டமை, மாகாணசபைகளில் இருந்த அரசியல்வாதிகள் அன்றையதினம் மாகாணசபை கேட்போர் கூடத்தில் நடைபெற்ற கூட்டத்தில் கலந்துகொண்டமை தொடர்பில் எமது கபே அமைப்பு, வடமத்திய மாகாண ஆளுநரிடம் முறைப்பாடு செய்திருந்தது” என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.

”பொதுவாக, மாகாணசபைகள் ஆளுநரின் நிர்வாகத்தின் கீழ் கொண்டுவரப்பட்டதன் பின்னர், அதன் உடமைகள் அரசியல் நடவடிக்கைகளுக்கு பயன்படுத்துவது அரசசொத்து துஷ்பிரயோகமாகும். அவ்வாறான செயற்பாடுகளில் ஈடுபடுகின்ற நபர்களும், அவ்வாறான செயற்பாடுகளுக்கு உதவிகளை வழங்குகின்றவர்களும் இலங்கைச் சட்டத்தின் கீழ் தண்டனை கிடைக்க கூடியக் குற்றங்களுக்கு உள்ளாகின்றனர்“ என்றும் அவர் குறிப்பிட்டார்.

“இந்தச் செயற்பாடுகளின் விளைவுகள் தொடர்பில், வடமத்திய மாகாணத்தின் அதிகாரிகள் தெளிவற்றிருப்பது கவலைக்குரிய விடயமாகும் மேலும், ஆளுநரின் நிர்வாகத்தின் கீழ் கொண்டுவரப்பட்டுள்ள சந்தர்ப்பத்தில், அதனுடைய அரசசொத்து துஷ்பிரயோகம் செய்யப்படுவதை நிறுத்துவது ஆளுநர், மாகாண சபையின் பிரதான செயலாளர் மற்றும் ஏனைய அதிகாரிகளின் பொறுப்பாகும்” என அவர் மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

vakeesam Like Page close[x]
Or wait 30 seconds
Social Media Auto Publish Powered By : XYZScripts.com